2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மீண்டும் உயர்ந்தது கொழும்பு பங்குச்சந்தை

A.P.Mathan   / 2013 ஜூன் 11 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்தும் கொழும்பு பங்குச்சந்தையில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தமையால், நேற்றைய தினம் (10) பங்கு கொடுக்கல் - வாங்கல்கள் நிறைவடையும் பொழுது, மீண்டும் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. 
 
இலங்கை மத்திய வங்கியின் மூலம் வெளியிடப்பட்டிருந்த வட்டி வீதங்கள் வீழ்ச்சியடையும் என்பது தொடர்பிலான அறிவித்தலை தொடர்ந்து, வட்டி வீதங்கள் தொடர்ந்து மேலும் வீழ்ச்சியடையும் எனும் எதிர்பார்ப்பில் அதிகளவு பங்கு கொள்வனவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது ஆர்வத்தை செலுத்தியிருந்தனர்.
 
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மூலம் கொழும்பு பங்குச்சந்தைக்கு 357.6 மில்லியன் ரூபா வெளிநாட்டு வருமானமாக கிடைத்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குப் பெறுமதி 2.94 வீதம் அதிகரித்து 272.8 ஆக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .