2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

பங்குதாரர்களுக்கு அதியுயர் பங்கிலாபத்தை வழங்கும் ஜனசக்தி

A.P.Mathan   / 2013 ஜூன் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான முதலீட்டினை ஏற்படுத்தி ஏனைய காப்புறுதி கம்பனிகளிடையே அதியுயர் பங்கிலாபத்தினை வழங்கும் நிறுவனமாக திகழ்கின்றது' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த மார்ச் 31, 2013இல் முடிவடைந்த ஆண்டிற்கான ஆண்டுப் பங்குலாபமாக 9.52 வீதத்தை செலுத்தியிருந்ததுடன், இது ஏனைய காப்பீட்டு நிறுவனங்கள் மத்தியில் அதியுயர் பங்கு லாபமாக பதிவாகியிருந்தது.
 
'எமது நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பங்குதாரர்களிற்கு எப்போதும் அதிகூடிய வருமானத்தை பெற்றுக் கொடுக்கவே நாம் விரும்புகின்றோம். விலையை பொறுத்தமட்டில், தமது முதலீட்டு தொகுப்பின் பெறுமதியை அதிகரித்துக் கொள்ள சிறிய மற்றும் நடுத்தர பங்குதாரர்களினால் கூட ஏற்கக்கூடிய வகையில் எமது கையிருப்பு காணப்படுகிறது' என ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
 
'இவ்வாண்டு ஏப்ரல் மாதம் கொழும்பு பங்குச்சந்தையின் பிரதான பட்டியலில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் இடம் பிடித்திருந்தது. ஜனசக்தி நிறுவனமானது வணிக நடவடிக்கைகளுக்கு தேவையான மூலதனத்தை காட்டிலும் ஏழு மடங்கிற்கு கூடிய 1.4 பில்லியன் ரூபாய் மூலதன கட்டமைப்பை தொடர்ந்து பேணிவருகிறது. ஏனைய பட்டியலிடப்பட்ட கம்பனிகளிடையே அதியுயர் பங்கு மூலதனத்தை எமது நிறுவனம் கொண்டுள்ளது. காப்புறுதியானது நீண்டகால வர்த்தகமாகும். குறிப்பிடத்தக்க பங்கு மூலதனமானது வலுவான உரிமைகோரலிற்கான சமிக்ஞையாகவும், பங்குதாரர்களுக்கு ஸ்திரத்தன்மையையும் மற்றும் வியாபாரத்தின் நீடித்த தன்மைக்கும் இன்றியமையாததாகவும் விளங்குகின்றது' என மேலும் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.
 
ஏனைய காப்புறுதி நிறுவனங்களின் அதிக விலை கொண்ட பங்குகளுக்கு எதிராக தற்போது பங்கொன்றின் விலை சுமார் 12.00 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பங்குச்சந்தையை ஆக்கிரமித்த பங்கு தெரிவுப் பட்டியலில் ஜனசக்தி பின்தங்கியிருந்த போதிலும், சமீபத்திய ஆண்டுகளில் பங்கிலாப பிரிவில் தொடர்ந்து முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது.
 
ஜனசக்தி நிறுவனமானது 100இற்கும் அதிகமான கிளை வலையமைப்புக்கள் மற்றும் நாடுபூராகவும் உள்ள 273 மோட்டார் மதிப்பீட்டாளர்கள், ஃபுல் ஒப்ஷன் ஒட்டோ சென்டர் மற்றும் 24 மணிநேர அழைப்பு நிலையங்கள் போன்றவற்றின் வலையமைப்பின் ஊடாக போட்டிகர நிலைமைகளை எதிர்கொள்கிறது.
 
ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது 2012ஆம் ஆண்டிற்கான இலாபமாக 8 பில்லியன் ரூபாவையும், மொத்த தேறிய இலாபமாக 8.26 பில்லியன் ரூபாயை ஈட்டியிருந்தது. நிறுவனத்தின் கடுமையான செலவு கட்டுப்பாட்டுடனான விலக்கழிக்கப்பட்ட வரிக்கு பின்னரான இலாபமாக 800 மில்லியன் ரூபாய்களை ஈட்டியுள்ளது. இவ் 62 சதவீத வளர்ச்சியானது சந்தையில் அதன் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. 
 
ஜனசக்தி காப்புறுதி நிறுவனமானது கடந்த 18 ஆண்டுகளாக தேசத்திற்கு சேவையாற்றி வருவதுடன், இலங்கை காப்புறுதி துறையில் அதன் வளர்ச்சி போக்கு தொடர்கிறது. ஜனசக்தி நிறுவனமானது நிதிசார் ஸ்திரத்தன்மை மற்றும் நஷ்டஈடு வழங்கலை பொறுத்தவரை சொத்துக்களில் 15.8 பில்லியன் ரூபாய்களை கொண்டுள்ளது. மேலும் வருடாந்த மொத்த தேறிய தவணை கட்டணமாக 7.9 பில்லியன் ரூபாய்களை கொண்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் ஆரம்பநாள் தொடக்கம் இன்றுவரை அதன் காப்புறுதிதாரர்களுக்கு 20 பில்லியனுக்கும் அதிகமான நஷ்டஈட்டு தொகையை வழங்கியுள்ளது.
 
ஜனசக்தி நிறுவனக் குழுவின் மூலம் இடர்பாடு கண்டறிதல், மதிப்பீடுகள் மற்றும் தடுப்பு செயல்முறைகள் குறித்த விரிவான தகவல்களை பெற உள்ளக கட்டுப்பாட்டு அமைப்பினை நிறுவியுள்ளது. இக் குழுவானது, உட்கட்டமைப்பில் பாலின பாகுபாடின்றி சரியான விகிதத்தில் நிறைவேற்றல்லாத சுயாதீன பணிப்பாளர்களை கொண்டுள்ளது. இக் குழுவில் டபிள்யு.டி.எல்லாவல (தலைவர்), சி.டி.ஏ.ஷாஃப்ட்டர் (உப தலைவர்), பிரகாஷ் ஷாஃப்ட்டர், எல்.சி.ஆர்.டி.சி.விஜேதுங்க, மஞ்சுள மத்தியூஸ், தேஷமான்ய டாக்டர் நிஹால் ஜினசேன, ரமேஷ் ஷாஃப்ட்டர், எர்ட்லி பெரேரா மற்றும் அனுஷா குமாரசுவாமி ஆகியோர் காணப்படுகின்றனர்.
 
ஜனசக்தி நிறுவனத்தின் 'A Transformative Spirit' ஆண்டறிக்கைக்கு அண்மையில் The League of American Communications Professionals (LACP) இன் பிளாட்டினம் விருது கிடைக்கப் பெற்றது. மேலும் இலங்கை பட்டயக் கணக்காளர் கல்வியகம் மற்றும் தெற்காசிய கணக்காளர் சம்மேளனம் போன்றவற்றின் அங்கீகாரத்தை ஜனசக்தி நிறுவனத்தின் 2011ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை பெற்றுக் கொண்டது. மேலும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிராமிய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கிய ஆதரவினை வர்த்தக சம்மேளனம் அடையாளப்படுத்தியது. மேலும் ACCA இனால் கூட்டுநிறுவன நடைமுறைகள் மற்றும் தகவல்கள் போன்றவற்றிற்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .