2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றிபெற்றவருக்கு பரிசில்

Kogilavani   / 2013 ஜூன் 13 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இசெட்.சாஜஹான்    
தேசிய மாணவர் படையணிக்கு கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்கான லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றிபெற்றவருக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தரவின் ஆலோசணையின் பேரில் தேசிய மாணவர் படையணிக்கு கேட்போர் கூடமொன்றை அமைப்பதற்கான நிதியினை திரட்டும் வகையில் இந்த லொத்தர் சீட்டிழுப்பு நடத்தப்பட்டது.

இச்சீட்டிழுப்பில், பலாந்தொட்ட ரம்புக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜயந்தி சமரவிக்ரம என்பவர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

இதன்போது, இவருக்கு தேசிய மாணவர் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி பிரியன்ந்தி ஜயசுந்தர பரிசில்களை வழங்கிவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .