2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கையின் சூரை மீன், வாழை துறைகளில் ஜப்பான் ஆர்வம்

A.P.Mathan   / 2013 ஜூன் 28 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சூரை மீன், வாழை மரச்செய்கையில் தமது முதலீடுகளை விஸ்தரிப்பதற்கு ஜப்பானின் ITOCHU கூட்டுத்தாபனம் ஆர்வமாக உள்ளதாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
 
இந்த விடயம் குறித்து ITOCHU கூட்டுத்தாபனத்தின் தலைவர் கொஹுஹெய் வடனெபே இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சூழல் பாதுகாப்பான மின் உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான தமது விருப்பத்தையும் அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இலங்கையில் வாழைப்பழம், அன்னாசி, ரம்புட்டான் பயிர்ச்செய்கைக்காக சிறந்த காலநிலை மற்றும் வாய்ப்புகள் காணப்படுவதாக அமைச்சர் கொஹுஹெய் வடனெபேயிடம் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .