2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கொழும்பு பங்குச்சந்தையின் பணிப்பாளர் சபைக்கு புதிய அங்கத்தவர்

A.P.Mathan   / 2013 ஜூன் 30 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குசந்தையின் வருடாந்த ஒன்றுகூடலின் போது, பணிப்பாளர் சபைக்கான புதிய அங்கத்தவராக அசங்க செனவிரட்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
முன்னர் பணிப்பாளர் சபையின் அங்கத்துவராக திகழ்ந்த கலாநிதி சமன் கெலேகம தனது அங்கத்துவத்தை புதுப்பித்துக்கொள்ள விரும்பம் தெரிவிக்காததை தொடர்ந்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
 
அனிலானா ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் ஸ்தாபகரும் நேஷன் லங்கா ஃபினான்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளரும், நேஷன் லங்கா ஈக்குவிட்டீஸ் நிறுவனத்தின் தலைவராகவும் அசங்க செனவிரட்ன செயற்படுகிறார்.
 
இந்த புதிய நியமனத்தை தொடர்ந்து, கொழும்பு பங்குச்சந்தையின் பணிப்பாளர் சபையில் கிரிஷான் பாலேந்திரா, வஜிர குலதிலக, எம்.ஆர்.பீரிஸ், தக்ஷித தல்கொடபிட்டிய, ஹிரான் டி அல்விஸ், ஜீவா நிரியெல்ல, ரே அபேவர்த்தன மற்றும் அசங்க செனவிரட்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .