2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் இலங்கைக்கு சீனா பெருமளவு நிதியுதவி

A.P.Mathan   / 2013 ஜூலை 03 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முதல் நான்கு மாத காலப்பகுதியினுள் 165.28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 
இதே காலப்பகுதியில் உலக வங்கி 95.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பான் 89.43 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இந்தியா 77.02 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 63.77 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஈரான் 25.34 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் நிதியுதவியாக வழங்கியிருந்தன.
 
1980ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் இலங்கைக்கு அதிகளவு நிதியுதவிகளை வழங்கும் நாடுகள் பட்டியலில் ஜப்பான் முன்னிலையில் திகழ்ந்தது. 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் சீனா இந்த ஆதிக்கத்தை தன்வசப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .