2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஒருவார உயர்வு பெறுமதியை கொழும்பு பங்குச்சந்தை பதிவு செய்தது

A.P.Mathan   / 2013 ஜூலை 03 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையின் பிரதான சுட்டிகள் நேற்றைய தினம் கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது 0.13வீதம் அதிகரித்து 6140.79ஆக பதிவாகியிருந்தது. கடந்த ஒருவார காலப்பகுதியில் பதிவாகிய அதியுயர் பெறுமதியை நேற்றைய தின கொடுக்கல் வாங்கல்களின் போது பதிவு செய்திருந்தது. 
 
இந்த கொடுக்கல் வாங்கல்களின்போது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பெருமளவு செல்வாக்கு செலுத்தியிருந்தன. நேற்றைய தினம் மொத்த புரள்வு பெறுமதியாக 472.7 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. இந்த வருடத்தின் சராசரி மொத்த புரள்வு பெறுமதியான 1 பில்லியன் ரூபாவின் அரைவாசியிலும் குறைந்த பங்காக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .