
இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி, முற்றிலும் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் நோக்கில் கொள்ளுப்பிட்டியில் தனது புதிய கிளையை திறந்துள்ளது. கொழும்பு காலி வீதியில் அமைந்துள்ள இப் புதிய கிளை வாடிக்கையாளர்களின் வசதி கருதி திறக்கப்பட்டுள்ளது. இப் புதிய கிளையை ஜனசக்தி நிறுவனத்தின் மூத்த நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் பங்குபற்றலுடன் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் உப தலைவர் சந்திரா ஷாஃப்ட்டர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இத் திறப்பு விழாவில் கருத்து தெரிவித்த ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் உப தலைவர் சந்திரா ஷாஃப்ட்டர், 'தனிநபர் ஒருவர் அவரது அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்திற்கான திடமான அடித்தளத்தை ஏற்படுத்தும் முழுமையான முதலீடே ஆயுள் காப்பீடாகும். கொள்ளுப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப் புதிய கிளையை எமது ஆயுள் காப்புறுதிதாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் வகையிலும் செயற்திறன் மிக்க இடமாகவும் உருவாக்கியுள்ளோம்' என்றார்.
ஜனசக்தி நிறுவனத்தின் மூலம் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதிய அனுகூலங்களை அனுபவிக்கக்கூடிய வகையில் லைஃவ்சேவர் திட்டம் மற்றும் தனிநபர் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் நெகிழ்வான நிதி திட்டமாக 'ஜீவித வர்தன' போன்ற திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இத் திறப்பு விழாவில் கருத்து தெரிவித்த ஜனசக்தி நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் செஹாரா டி சில்வா, 'ஜனசக்தி எமது சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சேவையாற்றுகிறது. இதன் காரணமாகவே எமது வலையமைப்பு நாடுபூராகவும் விஸ்தரித்துள்ளது. நாம் தொடர்ச்சியான அபிவிருத்தியையும் வசதி மற்றும் சேவைகள் அடிப்படையில் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்தவற்றை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்துகிறோம்' என்றார்.
ஜனசக்தி நிறுவனம் நாடுபூராகவும் 110 கிளை வலையமைப்பினை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து கிளைகளும் தலைமை காரியாலயத்துடன் கணனி மூலமான தொடர்பினை கொண்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித தங்குதடையின்றி இலவசமாக தகவல்களை அணுகுவதற்கான வசதி மற்றும் தமது கொள்கை நடவடிக்கைகளை நெகிழ்வுத்தன்மையுடன் மேற்கொள்வதற்கான வாய்ப்பினையும் வழங்குகிறது.