.jpg)
- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்
-ச.சேகர்
கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களை பொறுத்தமட்டில் கடந்த வாரம் சரிவான நிலையிலேயே பிரதான சுட்டிகள் காணப்பட்டன. இதற்கு பிரதான காரணியாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து தமது பங்குகளை விற்பனை செய்து வெளியேறி வருகின்றமை அமைந்திருந்தது. இந்நிலையில் இலங்கையின் நாணயத்தின் பெறுமதி மதிப்பிறக்கத்திற்கும், பங்குச்சந்தை சரிவுக்கும் கடந்த வாரம் மூடி தரப்படுத்தல் அமைப்பின் மூலம் இலங்கைக்கான நிதித்தரப்படுத்தல் குறைக்கப்பட்டிருந்தமை காரணமாக அமைந்திருக்கலாமென சர்வதேச செய்திச் சேவைகளை அறிவித்திருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,048.18 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3383.46 ஆகவும் அமைந்திருந்தன.
ஜூலை 2ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,225,751,625 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 23,650 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,389 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,261 ஆகவும் பதிவாகியிருந்தன.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈ-செனலிங், ஜி.எஸ்.பினான்ஸ், சுவதேஷி, சிலோன் பெவரேஜ் மற்றும் சிஐரி போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
பிசிஎச் ஹோல்டிங்ஸ், பிசி ஹவுஸ், டச்வுட், எஸ்.எம்.பி.லீசிங் (சாதாரண) மற்றும் பிசி பார்மா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 42,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 38,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.18 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 199.25 ஆக காணப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருட காலப்பகுதியில் டொலருக்கு நிகராக பதிவான ஆகக்குறைந்த பெறுமதி கடந்தவார நாணய மாற்றுக் கொடுக்கல் வாங்கல்களின் போது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.