
டெல்மேஜ் ஃபோர்சைத் அன்ட் கொம்பனி லிமிட்டெட் நிறுவனமானது அத்தியாவசியமான சமையலறை மசாலா (வாசனைத் திரவிய) வகைகளை அண்மையில் உள்நாட்டுச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம், பரந்துபட்ட தொடர்களிலான தனது நுகர்வோர் உற்பத்திகளை மேலும் வளப்படுத்தியுள்ளது.
சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட அதேவேளை, உயர் தராதரங்கள் உறுதிப்படுத்தப்படும் இந்த மசாலா வகைகள் அனைத்தும் எந்தவொரு இலங்கையரின் சமைலறைக்கும் அடிப்படைத் தேவைகளாக காணப்படுபவையாகும்.
50 கிராம், 100 கிராம் மற்றும் 250 கிராம் போன்ற சிறிய கைக்கடக்கமான பைக்கற்றுகளில் கிடைக்கக் கூடியதாகவுள்ள இந்த மசாலா வகைகளுள் - மிளகாய்த் தூள், கறித் தூள், மஞ்சள் தூள், கலவையாக பதப்படுத்தப்பட்ட கறித் தூள், மிளகாய் துகள்கள் மற்றும் மிளகு தூள் ஆகியவை உள்ளடங்குகின்றன.
டெல்மேஜ் இன் நுகர்வோர் தொகுதி நிறுவனப் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஷான் கன்னங்கர கூறுகையில், 'பல்வேறு வர்த்தகக் குறியீடுகளிலான மசாலாக்கள் இப்போது சந்தையில் இருக்கின்றனதான். ஆயினும் சுவை, நறுமணம் மற்றும் தரம் தொடர்பான சுயாதீன சமையற்கலை நிபுணர்கள் மூவரினால் கடுமையாக பிசோதிக்கபட்டு அவர்களால் மிகவும் சாதகமான பெறுபேறுகள் வழங்கப்பட்ட எமது புதிய உற்பத்திகளையே நாம் வழங்குகின்றோம். உள்நாட்டில் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற மிகச் சிறந்த உள்ளீடுகளைப் பயன்படுத்தியே இந்த மசாலா பொருட்கள் அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம் உண்மையான இலங்கையரின் உற்பத்தியாக இது மாற்றப்படுகின்றது. டெல்மேஜின் 150 வருடங்கள் பழைமைவாய்ந்த பாரம்பரியத்தை எமது மசாலா வகைகள் தம்மோடு கொண்டு வருகின்றன. இந்தப் பாரம்பரியமானது - மிகவுன்னத தரம், நீண்டகாலமாக பரீட்சித்து உறுதிப்படுத்தபட்ட நம்பகத் தன்மை மற்றும் எமது பழம்பெரும் சிறப்புத்துவம் போன்றவற்றை ஒருங்கே கொண்டதாகவுள்ளது' என்றார்.
கடந்த பல தசாப்தங்களாக டெல்மேஜ் ஃபோர்சைத் அன்ட் கொம்பனி லிமிட்டெட் நிறுவனமானது அதிக வகைகளிலான பிரபல உணவுப் பொருட்களை இலங்கை நுகர்வோர்களுக்கென தருவித்துள்ளது. டெல்மேஜ் தொடரைச் சேர்ந்த அவ்வாறான பல்வகைப்பட்ட உற்பத்திகளுள் - தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், சோயா மீற், மோத்தா டெசர்ட்ஸ், ஜெலி மற்றும் பலுடா, பெரேரோ ரொச்சர், நியுடெல்லா, ரிக்-டக், கிண்டர் ஜோய், மணமூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள், தேயிலை, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போன்றவையும் ஏனையவற்றுள் அவுஸ்திரேலியாவின் நம்பர் 1 பழச்சாறு வர்த்தகக் குறியீடான 'பெர்ரி' போன்ற இன்னும் பல உற்பத்திகளும் உள்ளடங்கும். நிறுவனமானது நுகர்வோரின் தேவைகளை தொடர்ச்சியாக இனங்கண்டு வந்துள்ளதுடன் அவர்களது தேவைக்குப் பொருத்தமான உயர் தரமிக்கதும், கொடுக்கும் பணத்திற்கு பெறுமதியானதுமான உற்பத்திகளை அவர்களுக்கு வழங்கி வருகின்றது.
'நாம் எப்போதுமே போட்டிச் சூழலை நேருக்கு நேராக எதிர்கொண்டபோதும், எந்த வேளையிலும் ஒரு வெற்றியாளராக அதிலிருந்து வெளியேறினோம். தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்ற உற்பத்தி வகையறாக்களின் ஊடாக டெல்மேஜ் நிறுவனம் கடந்த பல வருடங்களாக நூறாயிரக்கணக்கான நுகர்வோர்களின் நம்பிக்கையை வென்றுள்ளது. எமது கம்பனியின் அதிகளவான வெற்றிகள் எமது வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையினால் கிடைக்கப் பெற்றவையாகும்' என்று கன்னங்கர கூறி முடித்தார்.
150 வருட காலம் பழமைவாய்ந்த வளம் பொருந்திய வரலாற்றைக் கொண்டதொரு கூட்டு நிறுவனமாக டெல்மேஜ் திகழ்கின்றது. அதேநேரம், உணவு மற்றும் மென்பான துறையில் புகழ்பெற்ற வர்த்தகப் பெயராகவும் உள்ளது. இதற்கு மேலதிகமாக இந்நிறுவனமானது மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்கள், கப்பல் சேவை மற்றும் சரக்கு அனுப்புதல், உள்ளக மற்றும் வாழ்க்கைப் போக்குசார் உற்பத்திகள், அதேபோன்று காப்புறுதி, பயணம், விடுமுறைகால வசதிகள் மற்றும் ஏற்றுமதிகள் போன்ற துறைகளிலும் வர்த்தக ரீதியிலான பிரசன்னத்தைக் கொண்டியங்குகின்றது. அனைத்து முக்கிய துறைகளிலும் நிறுவனம் கொண்டுள்ள பிரசன்னமானது, இலங்கையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு கூட்டு நிறுவனமாக டெல்மேஜ் இனை நிலைநிறுத்தியுள்ளது. 'வேல்யிபல் குழுமம்' தலைமையிலான இந்நிறுவனத்தின் உரிமையாண்மைக் கட்டமைப்பு, விரைவாக முன்னேறிச் செல்லும் வர்த்தகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 வீதமான பங்கிற்கான பங்களிப்பினை இக்குழுமமே வழங்குகின்றது.