2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விமான பயணசீட்டு முகவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்து சம்மேளனம் அழுத்தம்

A.P.Mathan   / 2013 ஜூலை 15 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குரிய கொடுப்பனவுகளை முகவர் நிறுவனங்கள் 7 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென்ற அழுத்தத்தை சர்வதேச விமான போக்குவரத்து சம்மேளனம் தொடர்ந்து பிரயோகித்து வருவதாக விமான முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடைமுறை சர்வதேச விமான போக்குவரத்து சம்மேளனத்தின் மூலம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கடந்த புதன்கிழமை இரு தரப்பினருக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதிலும், எவ்வித சுமூகமான தீர்வுகளும் எய்தப்படவில்லை என அறிவித்துள்ளனர்.
 
தீர்வொன்று எய்தப்படும்வரை தாம் புதிய நடைமுறையை பின்பற்ற தீர்மானித்துள்ளதாகவும், இதன் காரணமாக தாம் நிதி நெருக்கடியை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் முகவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .