2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையில் சீமெந்து கேள்வி அதிகரிக்கும்: டோக்கியோ சீமெந்து

A.P.Mathan   / 2013 ஜூலை 18 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் சீமெந்துக்கான கேள்வி 7 வீதத்தால் வீழ்ச்சியடைந்த போதிலும், ஆண்டு ஒன்றுக்கு 10 வீதம் எனும் அடிப்படையில் மத்தியளவு அதிகரிப்பை இலங்கை எதிர்கொள்ளும் என இலங்கையில் இயங்கும் டோக்கியோ சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
 
2012ஆம் ஆண்டில் இலங்கையில் சீமெந்துக்கான கேள்வி 12 வீதமாக பதிவாகியிருந்தது. ஆயினும், 2012ஆம் ஆண்டிலும், இந்த ஆண்டின் முற்பகுதியிலும் நிர்மாணத்துறையில் காணப்பட்ட மெதுவான செயற்பாடுகளின் காரணமாக சீமெந்துக்கான கேள்வி சரிவடைந்துள்ளதாக டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .