2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எம்பா ரிசேர்சுடன் இணைந்து கொழும்பு பங்குப் பரிவர்த்தனை உரிமைமுதல் ஆராய்ச்சியில் உட்பிரவேசிக்கின்றது

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் எம்பாரிசேர்ச் லங்கா நிறுவனமும் இணைந்து தற்போது S&P ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டியினுள் உள்ளடங்கியுள்ள கம்பனிகளின் புலப்பாட்டினை மேம்பாடு செய்வதற்கு ஒரு கூட்டு முயற்சியில் இணைவதாக அறிவித்துள்ளன. எம்பா நிறுவனத்தின் சர்வதேச முதலீட்டு வங்கியியல் மற்றும் சொத்து முகாமைத்துவம் போன்றவற்றில் வளர்ச்சியடைந்து வருகின்ற சந்தைகளின் உரிமைமுதல் ஆய்வு அனுபவம் போன்றவற்றின் புலப்பாட்டினை அதிகரிப்பதற்கு கொழும்பு பங்குப் பரிவர்த்தனைக்கு துணை புரிகின்றது. 
 
உருவாக்கம் மற்றும் பராமரிப்புத் துறை மற்றும் விடய ஆய்வு, நிதியியல் மாதிரிகளையமைத்தல், செய்திகள் மற்றும் நிகழ்ச்சி ஆய்வு, புத்தாக்க அபிவிருத்தி ஆய்வு சந்தைப்படுத்தல் மற்றும் தொகையியல் நடுநிலை உள்ளடங்கலாக பகுதிகளில் விற்பனை பக்க மற்றும் கொள்முதல் பக்க ஆராய்ச்சிக் குழுவினருக்கு எம்பா நிறுவனத்தின் உரிமை முதல் ஆராய்ச்சியாளர்கள் உதவி செய்கின்றனர்.
 
கூட்டுமுயற்சி ஒப்பந்தத்திற்கு இணங்க கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் இணையத்தளத்தில் தொகுதியாக்கப்பட்டுள்ள S&P SL 20 பங்குகள் தொடர்பான உரிமைமுதல் ஆய்வினை மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை வழங்கும். வளர்ச்சி வெளிப்பாடு (Growth Outlook), பிரதான இடர்நேர்வுகள் (Key Risks) மற்றும் கம்பனிக்கான பொருந்தக்கூடிய நிகழக்கூடிய பெறுமதி எல்லை (Potential Valuation Range Applicable) ஆகிய உள்ளடங்கலான ஒவ்வொரு பங்குக்குமான அடிப்படை ஆய்வினை (Fundamental Analysis) ஆய்வறிக்கைகள் உள்ளடக்குகின்றன.
 
எவ்வாறெனினும் இவ்வறிக்கைகள், ஒரு முதலீட்டு பரிந்துரையை உள்ளடக்கவில்லை. அடிப்படையில் முதலீட்டாளர் கல்வி மற்றும் S&PSL 20 விலைச்சுட்டியினுள் உள்ளடங்கும் கம்பனிகள் தொடர்பான விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செயற்திறன் பெறுபேறு தொடர்பான காலாண்டு அறிக்கைகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டதாக இவ்வறிக்கைகள்அமையும்.
 
கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியற்படுத்தப்பட்டுள்ள கம்பனிகளில் ஆகக் குறைந்த மூலதன அளவு, திரவத் தன்மை மற்றும் நிதியியல் உறுதிப்பாடு என்பவற்றை கொண்டுள்ள 20 பெரிய (மொத்தசந்தை மூலதனவாக்கத்தால்) கம்பனிகளை S&PSL 20 விலைச்சுட்டெண் உள்ளடக்குகின்றது.
 
ஜோன் கீல்ஸ் பி.எல்.சி மற்றும் எய்ட்கன் ஸ்பென்ஸ் பி.எல்.சி ஆகிய கம்பனிகள் தொடர்பான இரண்டு ஆய்வறிக்கைகள் இதன் ஆரம்ப முயற்சியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றை www.cse.lk என்ற இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். ஆர்வமுள்ளவர்கள் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
 
இக் கூட்டுமுயற்சி தொடர்பாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேகா செல்லஹேவ கருத்துத் தெரிவிக்கையில், 'உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன ரீதியான முதலீட்டாளர்களுக்காக கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் அனுசரணையுடனான இப் புதிய கூட்டு ஆய்வறிக்கைகளின் வெளியீட்டு முயற்சி உள்நாட்டு மூலதன சந்தையை அபிவிருத்தி செய்யும் முயற்சியாக அமைகின்றது. மேலும் இந்த ஆய்வு அறிக்கைகள் முதலீட்டாளர்கள் மற்றும் பட்டியற்படுத்தப்பட்டுள்ள கம்பனிகளுக்கிடையிலான தகவல்களின் செவ்விசைவின்மையினை குறைப்பதற்கு இது உதவும் என நம்புகின்றோம்' எனக் குறிப்பிட்டார்.
 
எம்பாரிசேர்ச் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் தேசத் தலைவர் சானக திசாநாயக்க குறிப்பிடுகையில், 'கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் எம்பா நிறுவனத்தின் கூட்டுமுயற்சி குறித்துநாம் ஆர்வமாக இருப்பதுடன் சர்வதேச சந்தைக்கு சேவையாற்றல் தொடர்பான அனுபவத்தை இணைத்தல் மற்றும் துறைரீதியான சிறந்த வழக்கங்களை இணைப்பதனூடாகவும் உள்நாட்டு மூலதனச் சந்தையின் அபிவிருத்திக்கு உதவமுடியுமென நாம் நம்புகின்றோம். மேலும் வாசிப்போருக்கு துறைதொடர்பாக ஒரு கண்ணோட்டத்தினை வழங்குவதாகவும் கம்பனியின் முன்னறிவை வெளிப்படுத்துவதாகவும் இந்த ஆய்வறிக்கைகள் அமையும்' எனக் குறிப்பிட்டார்.
 
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை என்றால் என்ன?
இலங்கையிலுள்ள ஒரேயொரு பங்குச் சந்தையை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை இயக்குவதுடன் கம்பனிகளும் முதலீட்டாளர்களும் ஒன்றிணையக் கூடிய ஒரு வெளிப்படையான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட சூழலை வழங்குவதற்கும் பொறுப்பாயுள்ளது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது இலங்கையின் சட்டங்களுக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட உத்தரவாதத்தினால் பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒரு கம்பனியாகும். இந்நிறுவனம் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் (இ.பி.ப.ஆ.) உரிமமளிக்கப்பட்டுள்ளதுடன் இது 15 அங்கத்தவர்களையும் 14 வியாபார அங்கத்தகவர்களையும் உள்ளடக்கிய ஒரு பரஸ்பரமுள்ள பரிமாற்றகமாகும். அனைத்து அங்கத்தவர்கள் மற்றும் வியாபார அங்கத்தவர்கள் பங்குத்தரகர்களாகச் செயற்படுவதற்கு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளார்கள்.
 
எம்பா ரிசேர்ச் பற்றி
எம்பா ரிசேர்ச் நிறுவனமானது பாரிய சுயாதீனமான மூலதனச் சந்தை நிபுணத்துவ வெளிக்கொள்முதல் நிறுவனமாகும். இந்நிறுவனம் சுயாதீன வாடிக்கையாளர் திருப்தி அடிப்படையில் முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு என்பவற்றில் முதற்தர நிறுவனமாகும். உலகளாவிய 15 விற்பனை பக்க மற்றும் கொள்முதல் பக்க நிறுவனங்களில் பெரும்பாலானவை, இவை உரிமை முதல் ஆய்வு, நிலையான வருமான மற்றும் கடன் ஆய்வு, தொகையியல் ஆய்வு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், நிறுவன நிதி மற்றும் இணக்கப்பாடு என்பன தொடர்பான ஆய்வுகளில் எம்பா ரிசேர்ச் நிறுவனத்தை பயன்படுத்துகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .