2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெறுமதி வாய்ந்த நிறுவனமாக சிலோன் டொபாக்கோ

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பெறுமதி வாய்ந்த நிறுவனம் எனும் பெருமையை சிலோன் டொபாக்கோ கம்பனி தனதாக்கியுள்ளது. இதுவரை காலமும் இந்த பெருமையை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தன்வசப்படுத்தியிருந்தது. 
 
நேற்றைய தினம் (13) இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களை தொடர்ந்து சிலோன் டொபாக்கோ கம்பனியின் சந்தை மூலதனம் 224.8 மில்லியன் ரூபாவாக பதிவாகியதை தொடர்ந்து இந்த உயர்வான நிலையை தனதாக்கியிருந்தது. 
 
கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்களில் அதிகளவு செல்வாக்கு செலுத்தும் முன்னணி நிறுவனங்களில் இந்த இரு நிறுவனங்களும் முன்நிலையில் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .