2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விமானத்தில் தொழுகைக்கான ஆப்ளிகேஷன் சிங்கப்பூர் நிறுவனத்தினால் வடிவமைப்பு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானத்தில் பயணம் செய்கையில், எந்த நேரங்களில் இஸ்லாமிய பயணிகள் தமது தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும், எந்த திசைகளில் தமது தொழுகைகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற விபரங்களை உள்ளடக்கிய iPhone ஆப்ளிகேஷன் ஒன்றை சிங்கப்பூரின் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
 
நிலத்திலிருந்து 36,000 அடி உயரத்தில் பறந்த போதிலும், தெளிவாக இந்த திசைகளையும், சரியான நேரங்களையும் கணித்துக் குறிப்பிடும் வகையில் இந்த ஆப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
முற்றிலும் இலவசமாக வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப்ளிகேஷனுக்கு crescent trips என பெயரிடப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களின் அன்ட்ரொயிட் கையடக்க தொலைபேசிகளிலும் இயங்கக்கூடிய வகையில் இந்த மென்பொருள் மெருகேற்றப்படும் என குறித்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .