
கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, அண்மையில் கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் இடம்பெற்ற கடன் தகவல் பணியகத்தின் அணிக்கு ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 'ஆளுநர் வெற்றிக் கிண்ணத்தை' (Governor's Trophy – CRIB) வெற்றி கொண்டுள்ளது.
இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்தும் தோற்கடிக்க முடியாத வகையில் முன்ணணியில் திகழும் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது இலங்கையின் நிநியியல் துறை, வங்கியியல் மற்றும் வங்கியல்லா நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 68 நிறுவனங்கள் பெருமைமிகு வெற்றிக் கிண்ணத்திற்காக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட இப் போட்டியிலும்;, தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடனான தனது உண்மையான மனோதிடத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபித்துள்ளது.
அணி;த் தலைவரான அனுர டயஸ் 'சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான' விருதையும் 'இறுதிச் சுற்றின் ஆட்ட நாயகனுக்கான' விருதையும் தட்டிச் சென்றார். அதேவேளை, அணியின் வீரரான ரங்கா குரே 'சுற்றுப்போட்டியின் ஆட்ட நாயகன்' விருதை தமதாக்கிக் கொண்டார்.
வெற்றிவாகை சூடிய கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் அணியில் அனுர டயஸ் (தலைவர்), சம்மிக்க றுவான், ரங்கா குரே, கவிந்த சில்வா, சமிந்த விதானபத்திரண, இமேஸ் உதயங்க, குசால் சமின், பிரணீத் விஜேசேன மற்றும் ஹஷான் பெரேரா ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.