
லஸ்ஸன ஃபுளோரா நிறுவனமானது இல.279, நாவல வீதி, நாவல என்ற முகவரியில் அமைந்துள்ள தனது தலைமை அலுவலகத்தில் திருமணத்துடன் இணைந்த மலர் தொடர்பான அனுபவத்தை அளிப்பதன் ஊடாக, இலங்கையில் திருமணம் சார்ந்த துறைக்கு புதியதும் புத்தாக்கமானதுமான ஓர் உந்துசக்தியை வழங்குகின்றது.
'Lassana Moments' (அழகான கணங்கள்) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புதுமையான அனுபவத்தை தரும் நிகழ்வு ஓகஸ்ட் 11 முதல் 18ஆம் திகதி வரை மு.ப. 09 மணி தொடக்கம் பி.ப. 10 வரையும் இடம்பெறும். இது பொதுமக்கள் பார்வையிடும் விதத்தில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லசந்த மாளவிகே கூறுகையில், 'நாம் அழைப்பதற்காக பெயரிட்டுள்ளதைப் போல, இலகுவாகவே இலங்கையில் நடைபெறும் இவ்வகையான முதலாவது நிகழ்வாக இது அமைகின்ற அதேநேரம் இலங்கையின் திருமணம் சார்ந்த, அழகுக்கலை மற்றும் புகைப்படவியல் துறைகளில் தற்போது செயற்பட்டுக் கொண்டு இருக்கின்ற முக்கிய நிறுவனங்களை ஒரே இடத்திற்கு கொண்டுவரும் முயற்சியாகவும் திகழும். எமது வாடிக்கையாளராக இணைந்து கொள்ளவுள்ள இலங்கைப் பொதுமக்களுடன் எம்முடைய அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ளும் முகமாக நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்துள்ளோம்' என்றார்.
இதில் காணப்படும் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு வருகைதரும் அனைவரும் துறைசார் தொழில்வாண்மையாளர்களுடன் பேசுவதற்கும் அதேபோல், தங்களது தேவைகள் தொடர்பாக கலந்துரையாடி தத்தமது வரவு-செலவுத் திட்டங்களுக்கு மிகவும் பொருத்தமான செலவுச் சிக்கனமிக்க தீர்வுகளை கண்டறிந்து கொள்வதற்கும் முடியுமாக இருப்பதாகும். மிக உயர்ந்த தொழில்வாண்மையாளர்களால் வழங்கப்படுகின்ற இந்த இலவச ஆலோசனையானது, மணமகள்களும் மணமகன்களும் தமது கனவாக இருக்கின்ற திருமணத்தை திட்டமிட்டுக் கொள்வதற்கு அவர்களுக்கு உதவியாக அமையும்.
இந்நிகழ்வு நடைபெறும் இந்த ஒரு வார காலப்பகுதியின் வேறுபட்ட நாட்கள் மற்றும் நேரங்களில் ஹரிஸ் விஜேசிங்க, மைக்கல் விஜேசூரிய, றம்சி ரஹ்மான், ரமணி பெர்ணான்டோ, ஜொஹான் பீரிஸ், பேர்னி பாலசூரிய, பிரேமசிறி ஹேவாவசம் மற்றும் தனஞ்சய பண்டார உள்ளடங்கலாக மேலும் பல பிரபலங்கள் வருகை தரவுள்ளனர். அதேநேரம், 'ஸ்டூடியோ 3000' மற்றும் 'ஸ்டூடியோ யூ' போன்ற பல புகைப்படத் துறைசார் கம்பனிகளும் பங்கேற்கவுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் www.lassanaflora.com என்ற இணைய முகவரியிலும் பேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடியதாக காணப்படுகின்றன.
நிகழ்வு நடைபெறும் வாரத்தின் இறுதியில் சீட்டிழுப்பு ஒன்று இடம்பெறும். இதன்மூலம் வெற்றியாளராக தெரிவுசெய்யப்படும் நபர் இலவச 'திருமண சேவைப்பொதி' ஒன்றை வெகுமதியாக பெற்றுக் கொள்வார். இப்பொதியானது லஸ்ஸன ஃபுளோரா நிறுவனத்தின் மலர் அலங்காரங்கள், 'ஸ்டூடியோ 3000' நிறுவனத்தின் புகைப்படச் சேவை மற்றும் தனஞ்சய பண்டார வழங்கும் மணமகளுக்கான ஆடையுடுத்தல் சேவை போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். இதற்கு மேலதிகமாக, (திருமணத்திற்காக) ரூபா 100,000 இற்கு அதிகமான பெறுமதியுடைய முன்பதிவை உறுதி செய்கின்ற வாடிக்கையாளர்கள் தமது தேனிலவின்போது 'உறங்குதலுடன் - காலையுணவும்' (B/B) வழங்கப்படும் அடிப்படையில் ஹிக்கடுவை, சிற்ரஸ் ஹோட்டலில் இலவசமாக ஒரு இரவு தங்குவதற்கான வாய்ப்பை வென்றெடுப்பார்கள்.
'புதிய போக்குகளை உருவாக்குவதன் மூலமும் வசீகர தன்மையை அதிகரித்துக் கொள்வதன் ஊடாகவும் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனமானது இலங்கையின் திருமணம்சார் துறையில் தொடர்ந்தும் முன்னணியில் செயற்பட்டு வருகின்றது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதை விடவும் அதிகமான உற்பத்தி மற்றும் சேவைகளை அவர்களுக்கு வழங்குவதில் நிறுவனம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளது. அதன் பிரகாரம், இலங்கையில் வாழும் பொதுமக்களுக்கு இவ்வாறான இலவச ஆலோசனைச் சேவை ஒன்றை வழங்குவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். உண்மையிலேயே, இத்துறையில் இலங்கையில் இயங்குகின்ற முன்னணி நிறுவனங்களுள் ஒன்று என்ற வகையில் இது எமது கடமை என்றே நாம் கருதுகின்றோம். வாடிக்கையாளர்களின் வேறுபட்ட வரவு-செலவு திட்டங்கள் (பட்ஜெட்) மற்றும் விருப்பங்களுக்கு பொருந்தும் விதத்தில் பல்வேறுபட்ட புத்தாக்கமான திருமண சேவைப் பொதிகளை கடந்த பல வருடங்களாக நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
பிரத்தியேகமாக்கப்பட்ட சேவைப் பொதிகளை வழங்குவதற்கான இந்த முன்முயற்சியானது, எமது நிறுவனத்தை தனியாக மிளிரச் செய்கின்ற அதேவேளை, இலங்கையில் வீடுகள்தோறும் பிரபலமான வர்த்தக நாமமாக எம்மை ஆக்கியிருக்கின்றது' என்று கலாநிதி மாளவிகே மேலும் குறிப்பிட்டார்.
இவ்வருடத்தின் முற்பகுதியில் 'Flowers and Gifts Catalogue 2013' எனும் தனது புதிய உற்பத்தியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது மட்டுமன்றி கொழும்பு, கண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் அதற்கான இலவச விநியோக சேவையையும் அறிமுகப்படுத்தி வைத்ததன் மூலம் இலங்கையின் மலர்சார் வர்த்தகத் துறையில் லஸ்ஸன ஃபுளோரா நிறுவனம் புரட்சிகர மாற்றமொன்றை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையின் மலர்சார் வர்த்தகத் துறையில் போக்குகளை கட்டமைப்பதில் முன்னோடியாக திகழ்கின்ற லஸ்ஸன ஃபுளோரா நிறுவனமானது - நாவல, கண்டி சிற்றி சென்டர், மொரட்டுவை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள கிளைகளின் ஊடாக தொழிற்படுகின்றது. தென்னாசிய பிராந்தியத்திலேயே ISO 9001:2008 தரச் சான்றிதழைப் பெற்ற ஒரேயொரு மலர் துறை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந் நிறுவனம், 'SLIM வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதுகள் 2012' (SLIM Brand Excellence Awards 2012) நிகழ்வில் சிறிய மற்றும் நடுத்தர (SME) பிரிவின் கீழ் தங்க விருதினைப் பெற்று வெற்றிவாகை சூடிக்கொண்டது.