2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜனசக்தி நிறுவனத்தின் மூலம் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தளம் அறிமுகம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் செயற்திறனை அதிகரிக்கும் நோக்கில் ஜனசக்தி நிறுவனத்தின் மூலம் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தளம் (integrated IT platform) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத் தளமானது அனைத்து பங்குதாரர்களினதும் காப்புறுதி பயன்பாட்டினை (insurance applications) சீராக்குகிறது. இந் நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட கிளை வலையமைப்பானது ஒரே தளமாக இணைக்கப்பட்டுள்ளதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களிற்கு எவ்வித தடையின்றி தகவல்களை பயன்படுத்துவதற்கும், பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கிறது. இந்த தகவல் தொழில்நுட்ப தளமானது உற்பத்தி திறன் மற்றும் செயற்திறனை அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நன்மையளிக்கக்கூடிய வகையில் குறைந்த கடதாசி பயன்பாட்டு கொண்ட வர்த்தக செயல்முறையை உருவாக்குகிறது.
 
'எமது பங்குதாரர்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கு பொருந்தும் வகையிலான சிறந்த தீர்வுகள் உள்ளடங்கிய வகையிலான தளத்தை உருவாக்கிய எமது தகவல் தொழில்நுட்ப குழுவிற்கே அனைத்து கீர்த்தியும் சென்றடைய வேண்டும். விசேடமாக, எமது வாடிக்கையாளர்களின் சரியான தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்ததுடன், எமது சேவைகளின் அனைத்து அம்சங்களையும் ஒன்றிணைக்க முடிந்தது' என ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.  
 
ஆரம்பத்திலிருந்தே Windows அடிப்படையான முறைமையை பயன்படுத்திய தொழிற்துறைகளில்  ஜனசக்தி நிறுவனமும் ஒன்றாகும். இந் நிறுவனமானது முன்னைய முறைமைக்கு பதிலீடாக அண்மையில் அபிவிருத்தி செய்யப்பட்ட உள்ளக ஆவண முகாமைத்துவ முறைமையை அறிமுகம் செய்தது. இப் புதிய ஒழுங்குமுறையானது அனைத்து விதமான காப்புறுதி பயன்பாடுகளையும் ஒன்றிணைக்கிறது. கடந்த 2012ஆம் ஆண்டில், ஜனசக்தி நிறுவனத்தின் புதுமையான உள்நாட்டு பூகோள தரவுகள் மற்றும் காப்புறுதி ஆபத்துகளை மதிப்பிடும் வகையில் அமைந்த பூகோள தகவல் முறைமைக்கு (GIS) ஆசிய தொழில்நுட்ப காப்புறுதி விருது வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஜுலை மாதம் செயற்பாடுகளை ஆரம்பித்தது முதல், ஜனசக்தி நிறுவனத்தின் தீர்வுகள் காப்புறுதி உள்ளக தரவுகளுடன் ஒன்றிணைக்கப்பட்டு Google maps ஊடாக GIS சேவைகளை வழங்கி வருகிறது.
 
ஜனசக்தி நிறுவனத்தின் பயன்பாடுகள் மற்றும் மென்பொருள் போன்றன பயன்படுத்துனருக்கு தோழமை இடைமுகத்தையும், தனித்தன்மை கொண்ட செயல்முறையையும் வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களிற்கும், பணியாளர்களிற்கும் தகவல் சேகரிப்பு, ஒன்-லைன் மூலம் தரவுகள் பகுப்பாய்வு மற்றும் பரிவர்த்தனைகள் போன்றவற்றை செயற்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. 
 
'எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில், நாம் கைப்பேசிகள் மற்றும் அனைத்து இணைய தொடர்புடைய சாதனங்களுக்கும் ஏற்ற வகையிலான பயன்பாடுகளை (Application) உருவாக்கியுள்ளோம். எமது ஜனசக்தி மொபைல் பயன்பாட்டின் GPS ஊடாக விபத்து நடந்த இடத்தினை மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். ஜனசக்தி SMS முறைமையானது விரைவானதும், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களிடையே இருவழி தொடர்பு இணைப்பினை கட்டியெழுப்ப உதவுகிறது' என ஜனசக்தி நிறுவனத்தின் IT பிரிவின் உதவி பொது முகாமையாளர் திலக் விதானகே தெரிவித்தார். இப் புதிய ஜனசக்தி ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தளமானது தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .