2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கையடக்க தொலைபேசி சந்தையில் தடம்பதிக்கவுள்ள ஒரெஞ்ச் நிறுவனம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் மின் உதிரிப்பாகம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகிய துறைகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் முன்னிலை மின் உதிரிப்பாக நிறுவனமான ஒரெஞ்ச் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
அதற்கமைய இன்னும் இரண்டு மாதங்களில் கையடக்க தொலைபேசி துறையில் தடம்பதிக்க உள்ளதாகவும் இதற்கான உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் ஒரெல் கோப்பரேஷனின் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு தெரிவிக்கின்றார்.
 
இதன்மூலம் இலங்கையில் கையடக்க தொலைபேசி விற்;பனை சந்தைக்கு வரும் முதலாவது மின் உதிரிப்பாக நிறுவனமாக ஒரெல் கோப்பரேஷன் முத்திரை பதிக்கவுள்ளது. கையடக்க தொலைபேசி சந்தைக்கு வருவதற்கு ஒரெஞ்ச் நிறுவனத்துக்கு இந்தியாவின் பி.கே.மோடி குழுமத்துக்கு சொந்தமான ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் உதவுகின்றது. 
 
ஒரெல் கோப்பரேஷனின் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் கொடிதுவக்கு கருத்து தெரிவிக்கையில் 'மின் உதிரிப்பாக துறையும் கையடக்க தொலைபேசி துறையும் எதிர்காலத்தில் இரண்டு துறைகள் அல்ல. இரண்டுமே ஒன்றாகும். இது தற்போது புலப்பட ஆரம்பித்துள்ளது.  பலர் தமது வீடுகளிலுள்ள மின் உதிரிப்பாகங்களை தமது கையடக்க தொலைபேசியிலிருந்தே இயக்கும் காலம் வெகுவிரைவில் வரும். அதற்காக அவர்களுக்கு சிறந்த கையடக்க தொலைபேசிகள் தேவை. கையடக்க தொலைபேசிகளையும் மின் உதிரிப்பாகங்களையும் ஒரே கூரையின் கீழ் கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் அது பாவனையாளர்களுக்கு மிக நன்மை பயக்கும். அதற்கமையவே எமது நிறுவனம் கையடக்க தொலைபேசி துறையில் தடம் பதிக்க தீர்மானம் எடுத்துள்ளது' என கூறினார்.  
 
ஒரெல் கோப்பரேஷனின் கையடக்க தொலைபேசி பிரிவுக்கு பொறுப்பான பொது முகாமையாளர் கிஹான் ஷிகேரா கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் ஸ்பைஸ் மொபைல் நிறுவனத்துடன் கைகோர்க்க கிடைத்தமையானது சிறப்பானது. ஸ்பைஸ் மொபைல் நிறுவனம் இந்தியாவின் முன்னிலை நிறுவனமாகும். இலங்கை சந்தையை வென்றெடுப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பு எமக்கு சிறந்த அடித்தளமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .