2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நான்கு மாவட்டங்களிற்கு ஆதரவளித்த 'மஞ்சி சமக கமட சரண' திட்டம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் முதற்தர வர்த்தகநாமமான மஞ்சி அதன் சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களில் ஒன்றான 'மஞ்சி சமக கமட சரண' திட்டத்தின் கீழ் நான்கு புதிய செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இத் திட்டங்கள் கடந்த ஜுன் மற்றும் ஜீலை மாதங்களில் பேருவளை, பிபிலை, காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டங்கள்; ஊடாக கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. 'மஞ்சி சமக கமட சரண' சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் நாடுபூராகவுமுள்ள ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

பிபிலை யசோதரா பெண்கள் வித்தியாலயத்தின்; 400 மாணவிகளின் பன்முக தேவைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் மொனராகலை மாவட்டத்தில் 1200 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடம் நன்கொடையாக கையளிக்கப்பட்டது. தென் மாகாணத்தின் பேருவளை கீரன்திடிய பாலர் பாடசாலையின் 300 மாணவர்களும், எதிர்காலத்தில் பல மாணவர்களும் பயனடையக்கூடிய வகையில் நன்கொடையாக வாசிகசாலை கையளிக்கப்பட்டது.

நாட்டின் வடக்கு மாகாணத்தின் புனர்வாழ்வு திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மஞ்சி ஆனது இராணுவத்தினருடன் இணைந்து யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் காடுய் பிரதேசத்தில் 150 மாணவர்களிற்கு முழு வசதிகளுடனான முன்பள்ளியை நன்கொடையாக வழங்கியது.

இதற்கு மேலதிகமாக மஞ்சி குழுவினர் மூலம் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் காத்திருக்கும் அறை (waiting room)நிர்மாணிக்கப்பட்டது. இவ் வைத்தியசாலைக்கு தினசரி  நோயாளிகளை பார்வையிட தூர இடங்களிலிருந்து வருகை தரும் 3,000 வருகையாளர்களின் நீண்டநாள் தேவையாக இந்தக் காத்திருக்கும் அறை அமைந்திருந்தது.

புதிதாக நிறைவு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் குழுப் பணிப்பாளர் நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், 'மஞ்சி சமக கமட சரண திட்டமானது வெறுமனே உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டமல்ல, இது சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட திட்டமாகும்.

பெருநிறுவனம் எனும் ரீதியில், வறுமையை இல்லாதொழித்து கிராமத்தவர்களுக்கு சிறந்த வாழ்க்கையையும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில் மேம்படுத்தவே நாம் எந்நேரமும் முயற்சிக்கிறோம்.

இதுவரை 'மஞ்சி சமக கமட சரண' திட்டத்தின் கீழ் 54 திட்டங்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்ட போதிலும், மஞ்சி குழுவானது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அத்தளங்களுக்கு சென்று அதன் உயர் தரத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்' என தெரிவித்தார்.

இந்த CSRமுயற்சிகளின் உதவிகளை பெற விரும்பும் எவராயினும் தங்கள் பிரதேசத்தின் மஞ்சி தளத்தின் விற்பனை பணியாளரை தொடர்பு கொள்ள முடியும் என மேலும் அவர் தெரிவித்தார்.  மஞ்சி சமக கமட சரண திட்டத்தின் மூலம் நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் கணினி அறை வசதி, eLearningநிலையங்கள், சுத்தமான குடிதண்ணீர் வசதிகள், வாசிகசாலை மற்றும் வகுப்பறை வசதிகள் போன்ற பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .