2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொது ஏரிஎம் சேவைகள், வங்கிகளை அதிகளவில் கவர்ந்துள்ளன

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூலை மாதத்தில் இலங்கை வங்கிக்கும், மக்கள் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பொது ஏரிஎம் சேவை ஏனைய முன்னணி வங்கிகளையும் கவர்ந்துள்ளதாக இந்த திட்டத்தின் மேற்பார்வை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இரு அரச வங்கிகளின் 900க்கும் அதிகமான ஏரிஎம் வலையமைப்பை இணைத்து அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவையில் ஹற்றன் நஷனல் வங்கியும் இணைந்து கொள்வதற்கான ஆரம்ப கட்ட பரிசோதனை நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளது. செலான் வங்கி மற்றும் யூனியன் வங்கி போன்றன தற்போது இந்த பரீட்சார்த்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த பரிசோதனைகள் பூர்த்தியடையும் பட்சத்தில், அவையும் இந்த வலையமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும் என இந்த கட்டமைப்பின் ஏற்பாட்டு நிறுவனமான லங்கா க்ளியர் லிமிடெட் அறிவித்துள்ளது.
 
தேசிய சேமிப்பு வங்கியும் இந்த பொது ஏரிஎம் திட்டத்தின் பரிசோதனை நடவடிக்கைகளில் வெகு விரைவில் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .