2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வலிந்த விற்பனையின் காரணமாக பங்குச்சந்தை நடவடிக்கைகள் சரிவு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 03 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக வலிந்த விற்பனையில் அதிகளவில் ஈடுபட்டதன் காரணமாக திங்கட்கிழமை கொடுக்கல் வாங்கல்கள் நடவடிக்கைகள் சரிவடைந்த நிலையில் நிறைவடைந்திருந்தன.
 
குறிப்பாக நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பங்குகள் அதிகளவு கைமாறப்பட்டிருந்ததன் காரணமாக, கடந்த ஏழு வாரங்களில் அதிகளவு குறைந்த மொத்தப்புரள்வு பெறுமதியாக 277.1 மில்லியன் ரூபா பதிவாகியிருந்தது. 
 
சந்தையின் பிரதான சுட்டெண் 51.32 புள்ளிகள் சரிவடைந்து 5782.72 ஆக பதிவாகியிருந்தது. நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பங்குவிலை 6.21 வீதம் வீழ்ச்சியடைந்து 2002.10 ஆக விற்பனையாகியிருந்தது. சிலோன் டொபாக்கோ நிறுவனத்தின் பங்கின் விலை 1.63 வீதத்தால் சரிவடைந்து 1150.90 ஆக பதிவாகியிருந்தது.
 
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி திங்கட்கிழமை உறுதியான நிலையில் காணப்பட்ட போதிலும், நாணயமாற்று முகவர்களின் கருத்தின் படி, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாயத்திலிருந்து விடுபடவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
 
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 10.6 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை நேற்றைய தினம் (2) கொள்வனவு செய்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .