
கூட்டாண்மை இலாபகரமீட்டும் அளவுகோல் என்பதிலிருந்து சமூக சீராக்கும் மூலமாக சந்தைப்படுத்தலை மாற்றியமைக்கும் வகையில் 'சிறந்த ஒரு உலகை சந்தைப்படுத்தலின் மூலம் ஏற்படுத்துவது' எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக உலக சந்தைப்படுத்தல் செயலமர்வு 2013 மலேசியாவின் புத்ரஜயா சர்வதேச மாநாட்டு நிலையத்தின் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு உலகளாவிய ரீதியில் 2500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐந்து கண்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஏற்கனவே பதிவு செய்துள்ள இந்த நிகழ்வு, 3 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டு இந்த செயலமர்வு பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரில் முதல் தடவையாக நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வின் தலைவர் கலாநிதி. மார்செலின் லெமாரி கருத்து தெரிவிக்கையில், 'ஒவ்வொரு நிறுவனமும் தனது செயற்பாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்த ஆவலாக உள்ளன. ஆனாலும், அவற்றுக்கு அதை எவ்வாறு நட்டம் ஏற்படாத வகையில் செய்வது என்பது குறித்து போதிய விளக்கமில்லை' என்றார்.
'இந்த செயலமர்வு சாதாரணமாக சிந்தனை வெளிப்பாடுகளை மட்டும் கலந்தாலேசிப்பதாக அமைந்துவிடாது. ஓவ்வொரு நிறுவனமும் வெற்றிகரமாக தமது வர்த்தக நடவடிக்கைகளை சூழலுக்கு ஏதுவான முறையில் முன்னெடுத்துள்ளன என்பது குறித்து ஆராயும் வகையில் அமைந்திருக்கும். இதன் மூலம் உலகின் செயற்பாட்டுக்கு எவ்வாறு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது, வளர்ச்சியடையும் பொருளாதாரத்துக்கு எவ்வாறு பங்களிப்பு வழங்குவது போன்ற விடயங்களும் ஆராயப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் பொது ஊடக உறவுகளை முன்னெடுக்கும் முகவர் நிறுவனமான இஸ்டிக்காமா, மலேசியாவில் நடைபெறும் உலக சந்தைப்படுத்தல் செயலமர்வு 2013 இன் உத்தியோகபூர்வ தொடர்பாடல்கள் முகவராக கைகோர்த்துள்ளது. இஸ்டிக்காமா நிறுவனத்தின் தாபகரான தன்சில் தாஜுதீன் கருத்து தெரிவிக்கையில், 'இந்த செயலமர்வுடன் கைகோர்த்துள்ளமையையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். 2015ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகள் சபையின் 8 மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகளை எய்துவது எனும் இலக்கை நோக்கி பயணிக்கும் நடவடிக்கையில் சிறந்த பங்களிப்பாக இந்த உலக சந்தைப்படுத்தல் செயலமர்வு 2013 அமைந்திருக்கும்' என்றார்.
'சர்வதேச ரீதியில் காணப்படும் பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்கு சிறந்த செயலமர்வாக இந்த நிகழ்வு அமைந்திருக்கும். இலங்கையிலிருந்தும் இந்த நிகழ்வுக்கு அதிகளவு வரவேற்பும், பங்களிப்பும் காணப்படும் என நான் எதிர்பார்க்கிறேன், விசேடமாக சந்தைப்படுத்தல் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடியது. இதன் மூலம் சர்வதேச ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்' என அவர் மேலும் தெரிவித்தார்,
செயற்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றில் நுகர்வோரின் பங்களிப்பு அதிகளவில் இடம்பெறும் உலகில், பெருமளவான வாடிக்கையாளர்கள் வர்த்தக நாமம் குறித்து அதிகளவு கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் செலவிடும் பணத்துக்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பார்களாயின், அதிகளவு பணத்தை செலுத்திக்கூட பொருட்களை கொள்வனவு செய்ய தயாராகவுள்ளனர்.
பல சிறிய மற்றும் மத்திய அளவு நிறுவனங்கள் மற்றும் வேகமாக விற்பனையாகும் பொருட்களின் நிறுவனங்கள் போன்றன 8 மில்லேனியம் இலக்குகளை 2015ஆம் ஆண்டளவில் எய்த முடியாது என கருதியிருந்த போதும் மலேசியாவில் நடைபெறும் உலக சந்தைப்படுத்தல் செயலமர்வு 2013 இன் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலமாக மிக அருகில் கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வறுமை போன்ற விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு நாம் உலகளாவிய ரீதியில் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ள நிலையில், 1990 இல், 1.98 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாக இனங்காணப்பட்டிருந்தனர். இந்த நிலை 2010ஆம் ஆண்டில் 1.215 ஆக இந்த பெறுமதி குறைவடைந்திருந்தது. வறுமை ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக 2012/2013 ஆம் ஆண்டுகளில் UNDP திட்டத்தின் மூலம் செலவிடப்பட்டிருந்த மொத்த தொகை 4.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் பெரும்பகுதிய வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. ஒப்பீட்டளவில் நோக்கும் போது, உலகின் முதல் 10 நிறுவனங்களின் வருமானம் 318.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெறும் உலக சந்தைப்படுத்தல் செயலமர்வு 2013 இன் தொனிப்பொருள், வாருங்கள், பகிருங்கள், அறிந்து கொள்ளுங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை செயற்படுத்துவதன் மூலம் வருமானமீட்டி 8 பில்லியன் எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள் என்பதாக அமைந்துள்ளது என இஸ்டிக்காமா நிறுவனத்தின் தாபகரான தன்சில் தாஜுதீன் மேலும் குறிப்பிட்டார்.