2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

டச்வுட் நிறுவன பங்குகளின் வியாபாரம் இடைநிறுத்தம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 06 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

டச்வுட் நிறுவனத்தின் பங்குகளின் வியாபாரம் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்துவதற்கு இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடரை எதிர்நோக்கியுள்ள கம்பனியின் செயற்பாடுகள் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை பரிவர்த்தனை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. 
 
தொடர்ச்சியாக பங்குப்பெறுமதி சரிவடைந்து சென்றதை தொடர்ந்து, இலங்கை பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. முதலீட்டாளர்களையும், பங்குதாரர்களையும் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்ப கட்ட விசாரணைகளை தொடர்ந்து, இலங்கை பங்குப்பரிவர்த்தனை ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .