2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை பங்குகள் குறித்து ஹொங் கொங் நகரில் செயலமர்வு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று திங்கட்கிழமை ஹொங் கொங் நகரில் இலங்கை பங்குகள் குறித்த செயலமர்வு ஒன்று இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 11 பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
100க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றக்கூடும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த செயலமர்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் நாலக கொடஹேவா மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா ஆகியோர் தமது விளக்கங்களை வழங்கவுள்ளனர்.
 
இந்த ஆண்டில் இதுவரையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகளின் ஊடாக 18 பில்லியன் ரூபா வெளிநாட்டு முதலீடுகளாக இலங்கைக்கு கிடைத்துள்ளதுடன், கடந்த ஆண்டு 25வீதமாக காணப்பட்ட வெளிநாட்டு செயற்பாடு, இந்த ஆண்டில் 38 வீதமாக அதிகரித்துள்ளது என இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .