
பெண்களுக்கு அவர்களது நிதி நடவடிக்கைகளை பயனுள்ளதாகவும், வினைத்திறனாகவும் பேணுவதற்கு சந்தர்ப்பமளிக்கும் நோக்குடன் அமானா வங்கி நாட்டின் பெண் சமூகத்தை இலக்காகக் கொண்டு 'அமானா வங்கி மகளிர் சேமிப்புக் கணக்கை' அறிமுகப்படுத்தியுள்ளது. மகளிர் சேமிப்புக் கணக்கானது வைப்பிலிருக்கும் நிலுவைக்கு உயர் இலாபப் பகிர்வு வீதத்துடன் பல சலுகைகளை வழங்கும்.
இந்த புதிய கணக்கை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையற்றிய அமானா வங்கியின் நுகர்வோர் வங்கிச் சேவை மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் சித்தீக் அக்பர், ' பெண்கள் ஒரு தாயாக, மனைவியாக. ஒரு தொழில்வாண்மையாளராக அல்லது தொழில்முயற்சியாளராக ஒரு குடும்பத்தையும், சமூகத்தையும் நெறிப்படுத்துவதில் முக்கிய பங்களிப்புச் செலுத்தி வருகின்றனர். இந்த முன்மாதிரிமிக்க தரப்புக்கான ஒரு சமர்ப்பணமாக பல நன்மைகளை வழங்கும் ஒரு சிறப்பு சேமிப்புக் கணக்குத் திட்டத்தை பெண்களுக்காக அறிமுகப்படுத்துவதையிட்டு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.' என்றார்.
பெண்களின் வங்கித் தேவைகளை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்ட அமானா வங்கி பெண்களுக்கான பிரத்தியேக சேவையை முதன்முதலில் அறிமுகம் செய்தது. அந்த வகையில் மகளிர் சேமிப்புக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையானது வங்கியின் பெண்களுக்கான சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட மகளிர் கிளையின் முகாமையாளர், திருமதி. ஜே.பீ. அஷ்ரஃப் அவர்கள் ' அதிகரித்து வரும் பெண்களின் தேவைகளை கருத்திற்கொண்டு நாம் ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தை தற்போதைய சந்தை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் ' என்றார்.
மகளிர் சேமிப்புக் கணக்கை நாடுபூராகவும் அமைந்துள்ள அமானா வங்கியின் 23 கிளைகளிலும், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வங்கியின் விசேட மகளிர் கிளை ஊடாகவும் அல்லது தெரிவுசெய்யப்பட்ட கிளைகளில் அமைக்கப்பட்டுள்ள விசேட மகளிர் பிரிவுகளில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாவை வைப்புச் செய்து ஒரு கணக்கை திறந்து பல்வேறு பரிசில்கள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.