2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'பாதுகாப்பான நிறப்பூச்சை' அறிமுகப்படுத்தும் லங்கெம் ரொபியலெக்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


லங்கெம் ரொபியலெக் இலங்கையின் நிறப்பூச்சுத்துறையில் இன்னுமொரு புதிய முன்னெடுப்பாக குழந்தைகள் நட்புடைய உற்பத்தியான 'பாதுகாப்பான நிறப்பூச்சை' (Safe Coat) அறிமுகப்படுத்தியுள்ளது.
 
லங்கெம் சிலோன் PLCஇன் பணிப்பாளர் ருவான் ரீ. வீரசிங்க தெரிவிக்கையில், 'இதன் பெயர் குறிப்பிடுவதைப் போன்று, இந்த உற்பத்தியானது பக்டீரியா எதிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்புடையதாக உள்ளது. அத்துடன் மிகக் குறைவான நாற்றம் மற்றும் VOC கொண்டுள்ளது. சிறுவர்களை உடைய பெற்றோருக்கு நிம்மதியைத் தரும் விதத்தில் இது இலகுவாக கழுவக்கூடியதும் கறைபடியாததுமாக உள்ளது' என்றார்.
 
'பொறுப்புடைய நிறுவனம் என்ற வகையில் எமது சுற்றாடலை மாத்திரமல்லாது எமது எதிர்கால சந்ததியையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதினால் இந்த சிறப்பான உற்பத்தியை அறிமுகப்படுத்துவதில் கௌரவம் அடைகிறோம். சிறுவர்கள் தாம் வாழும் சூழலில் முகம் கொடுக்கும் ஆபத்துகள் குறித்து நாம் அவதானமாக இருப்பதுடன், இது சந்தையில் ஒரு சரியான அறிமுகமாக உள்ளது' என வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
 
பிரகாசமான மற்றும் மங்கிய நிறங்களில் உள்ள சேஃப் கோட், சிறுவர்களின் அறைகளுக்கும் வைத்தியசாலைகளின் சிறுவர் வார்டுகளுக்கும் பொருத்தமானது. இலங்கையின் இன்னுமொரு முதலாவதாக, இது சதுர பக்கட்டில் வருகின்றது.
 
'ரொபியலக்' குறியீட்டு உற்பத்திகளை தயாரித்து சந்தைப்படுத்தும் லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டட், இலங்கையின் மிகப்பெரிய உள்ளூர் நிறப்பூச்சு உற்பத்தியாளராக உள்ளது. இத்துறையின் முன்னோடியாகவும் உள்ள இந்நிறுவனம், ஏறத்தாழ 3 தசாப்த அனுபவத்தைக் கொண்டுள்ளது. 
 
லங்கெம் உற்பத்திகள் decorative, industrial, epoxies, primers, ancillary, anti corrosives, auto refinish மற்றும் பலகை பராமரிப்பு உற்பத்திகள் போன்ற இலங்கை நிறப்பூச்சு பாவனையாளர்களுக்கான உற்பத்திகளை உள்ளடக்கியுள்ளது. 
 
ஏக்கலயில் அமைந்துள்ள லங்கெம் பெயின்ட் தொழிற்சாலை, தர முகாமைத்துவ முறைமைக்காக SLS ISO 9001:2008 தரச்சான்றிதழைப் பெற்றுள்ள முதலாவது நிறப்பூச்சு உற்பத்தி நிலையமாக உள்ளதுடன், SLS குறியீட்டுக்கு மேலதிகமாக சுற்றுச்சூழல் முகாமைத்துவ முறைமைக்காக ISO 14001 தரச்சான்றிதழ் பெற்ற முதலாவதும் ஒரேயொரு பெயின்ட் உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .