2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பங்குச்சந்தை சரிவு, இலங்கை ரூபா உறுதி

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

திங்கட்கிழமை பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது சந்தை சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை பெறுமதிகள் உயர்வாக பெறுமதிகளை பதிவு செய்திருந்ததை தொடர்ந்து, நேற்றைய தினம், சந்தை சீராக்கத்தை அவதானிக்க முடிந்ததாக பங்குமுகவர்கள் தெரிவித்திருந்தனர். 
 
பிரதான சுட்டி 31.25 புள்ளிகள் சரிவடைந்து 5782.85 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. S&P SL 20 சுட்டெண் 2.57 புள்ளிகள் சரிவடைந்து 3215.03 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதி 485.8 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. 
 
கார்சன் கம்பர்பெட்ச், லங்கா ஒரிக்ஸ் லீசிங் மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியன அதிகளவு மறைப்பெறுமதிகளை பதிவு செய்திருந்தன.
 
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 131.90-95 ஆக பதிவாகியிருந்தது. வெள்ளிக் கிழமை இந்த பெறுமதி 132.15-20 ஆக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .