2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நாணயக் கொள்கையில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்: சர்வதேச நாணய நிதியம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நாணயக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மேற்பார்வை செயற்பாடுகளின் தலைமை அதிகாரி டொட் சினெய்டர் தெரிவித்திருந்தார்.
 
வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களை கொண்டு வருவதற்காக கட்டண மீளாய்வு, மூலதன விரயத்தை ஈடுசெய்யக்கூடிய வரிப்பணத்தின் பரந்த விநியோகம் மற்றும் பொது வர்த்தக சூழலில் மேம்படுத்தல்களை ஏற்படுத்துவது தொடர்பான விடயங்களில் இலங்கை அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
 
இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டில் 6.5 வீத வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்வுகூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .