2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சினோமெக்ஸ் பிரேக் ஒயில் மற்றும் கூலன்ட் இலங்கையில் அறிமுகம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டின் முன்னணி லுப்ரிகன்ட் வகைகளை விநியோகிக்கும் இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தி;ன் மூலம் சினோமெக்ஸ் பிரேக் ஒயில் மற்றும் கூலன்ட் போன்றன இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புகழ்பெற்ற சினோபெக் லுப்ரிகன்ட் வகைகளை இலங்கையில் அறிமுகம் செய்த பெருமையை இன்டர்ஓசியன் நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு மோட்டர் ஷோ – 2013 கண்காட்சி நிகழ்வின் போது, இந்த புதிய அறிமுகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஒடோ மிராஜ் நிறுவனத்தின் பணிப்பாளரான சந்திரா மோகன் மற்றும் மோட்டர்கேட் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் அசோக பெரேரா அகியோர் சினோமெக்ஸ் பிரேக் ஒயில் மற்றும் கூலன்ட் போன்றவற்றின் முதல் கட்ட பொதியை இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் பொது முகாமையாளர் சிரான் அபேசிங்கவிடமிருந்து பெற்றுக் கொண்டனர். 
 
இந்த நிகழ்வில் இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் பொது முகாமையாளர் சிரான் அபேசிங்க கருத்து தெரிவிக்கையில், 'இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பு குறித்து அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்துள்ளதுடன், அதிகளவு சிக்கனம் வாய்ந்தனவாகவும் வாகனங்களை நீண்ட காலம் உழைக்கும் திறனை கொண்டதாகவும் அமைந்துள்ளன. இரண்டு புதிய தயாரிப்புகளான சினோமெக்ஸ் பிரேக் ஒயில் மற்றும் கூலன்ட் போன்றன எவ்வித வேறுபாடுகளும் அற்றவை. ஆகவே, இலங்கை சந்தையில் காணப்படும் எமது தயாரிப்புகளுக்கு வலுச்சேர்ப்பதாக அவை அமைந்திருக்கும்' என்றார்.
 
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 'வாகனங்களின் நீடித்த உழைப்புக்கும் முறையான பராமரிப்புக்கும் உகந்த தயாரிப்புகளாக சினோமெக்ஸ் பிரேக் ஒயில் மற்றும் கூலன்ட் ஆகியன காணப்படுகின்றன. இது போன்ற பயனுள்ள மேலும் பல தயாரிப்புகளை இலங்கையைச் சேர்ந்த மோட்டார் வாகன உரிமையாளர்களுக்காக அறிமுகம் செய்ய இன்டர்ஓசியன் லுப்ரிகன்ட்ஸ் திட்டமிட்டுள்ளது' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .