2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பத்து வருடங்களுக்கு ஒரு முறை இலங்கையின் வீதி வலையமைப்பு விஸ்தரிக்கப்பட வேண்டும்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒரு தடவை இலங்கையின் வீதிகள் விஸ்தரிக்கப்படுவதன் மூலம் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்ய முடியுமென ஆசிய அபிவிருத்தி வங்கி ஆலொசனை வழங்கியுள்ளது. 
 
இலங்கையின் வீதி விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவிகளை வழங்கியிருந்த வேளையில் இந்த ஆலோசனையையும் வழங்கியிருந்தது. 
 
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பிரதான வீதிகளை அபிவிருத்தி செய்யும் வகையில் 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்த ஆசிய அபிவிருத்தி, இலங்கையில் நிலவும் போக்குவரத்து சூழ்நிலைகளுக்கு அமைய ஒவ்வொரு எட்டு முதல் பத்து வருடங்களுக்கு ஒரு முறை இலங்கையின் வீதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டியது முக்கியத்துவமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .