2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுற்றுலா மேற்கொள்ள இலாபமான நாடுகள் பட்டியலில் இருந்து இலங்கையின் தரப்படுத்தல் குறைப்பு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ள இலாபகரமான நாடுகள் பட்டியலில் இலங்கையின் தரப்படுத்தல் முதலாமிடத்திலிருந்து ஐந்தாமிடத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் போஸ்ட் ஒஃபிஸ் பயண சுட்டெண் (UK Post Office Travel Index) மூலம் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த தரப்படுத்தலில் இந்தோனேசியாவின் பாலி தீவுகள் முதலாமிடத்தை பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலைக்கு இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது. 
 
கொழும்பில் சுற்றுலாப்பயணிகள் தமது பொழுதை களிப்பதற்கு ஒரு நாளைக்கான செலவு 54.45 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மொத்த செலவீனம் பலமடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .