2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனத்துக்கு சிறப்பு விருது

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


நஷனல் பிவிசி குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்களை தயாரித்து விநியோகிக்கும் சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனம், இலங்கை தேசிய தொழிற்சாலைகள் சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த CNCI சாதனையாளர் விருதுகள் 2013 இல் சேவை சிறப்புக்காக மிகப்பெரிய பிரிவில் (தேசிய மட்டத்தில்) சிறப்பு விருதை தனதாக்கியிருந்தது.
 
உள்நாட்டு உற்பத்த நிறுவனங்களை இனங்கண்டு, அவற்றின் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும், தேசத்தின் அபிவிருத்தியில் குறித்த நிறுவனங்கள் வழங்கும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையிலும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு இலங்கை தேசிய தொழிற்சாலைகள் சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக பன்னிரண்டவாது தடவையாக இந்த விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சினமன் கிராண்ட் ஹோட்டலில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், இந்நிகழ்வின் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொண்டார்.
 
சென்ரல் இன்டஸ்ரிஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான நிவ்டன் விக்ரமசூரிய கருத்து தெரிவிக்கையில், 'சென்ரல் இன்டஸ்ரிஸ் மூலம் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. எமது நிறுவனத்தின் பிரதான நோக்கமாக, எமது பொருட்கள் அனைத்திலும் உயர் தரத்தை பின்பற்றுவது அமைந்துள்ளது. சந்தைக்கு விநியோகிக்கும் முன்னர், எமது பொருட்கள் அனைத்தும் முறையான பரிசோதனை முறைக்கு உட்படுத்தப்பட்டு, உயர் தரத்துக்கு அமைய தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்படும். எமது உயர் தொழில்நுட்பம் வாய்ந்த ஆய்வுகூடத்தின் மூலமாக எமது பொருட்களின் தரம் குறித்து கண்டிப்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது' என்றார்.
 
1985ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனம், அக்காலகட்டத்தில் நடைமுறையிலிருந்த ஜப்பானிய தரச்சான்றிதழ்கள் வழங்கல் முறைமைக்கு பதிலாக இலங்கை தரச்சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட போது, அதனை பெற்றுக் கொண்ட முதலாவது இலங்கை நிறுவனம் எனும் பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்துடன், ISO 9001 தரச்சான்றை பெற்றுக்கொண்ட முதலாவது குழாய்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி நிறுவனம் எனும் பெருமையையும் தனதாக்கியிருந்தது. பின்னர், சென்ரல் இன்டஸ்ரிஸ் கிரிப்டன் இலத்திரனியல் சுவிட்ச்களையும், உதிரிப்பாகங்களையும் உற்பத்தி செய்ய ஈடுபட்டதுடன், சொக்கட் வகைகள் மட்டுமல்லாமல் breaker, trips மற்றும் main switch வகைகளை (MCBs and RCCBs) உற்பத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளது.
 
நஷனல் PVC குழாய்கள் மற்றும் கிரிப்டன் இலத்திரனியல் சுவிட்ச் வகைகளை உற்பத்தி செய்வதற்கு மேலாக, சென்ரல் இன்டஸ்ரிஸ் பிஎல்சி நிறுவனம், ஜப்பான் நாட்டின் ஹிட்டாச்சி மின் சாதனங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக முகவராகவும் திகழ்கிறது. கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்பதுடன், நாட்டின் முன்னணி நிதியியல் நிறுவனங்களில் ஒன்றான பெருமைக்குரிய சென்ரல் ஃபினான்ஸ் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .