
ஆயுர்வேத பிரத்தியேக பராமரிப்பு பொருட்களை தயாரிப்பதில் முன்னணியில் திகழும் சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி மூலம் தொடர்ச்சியான பன்னிரண்டாவது ஆண்டாக சப்ரகமுவ மஹா சமன் ஆலயத்துக்கு ஒளியூட்டல் மேற்கொண்டிருந்தது. இந்நிகழ்வுக்கு 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' என பெயரிடப்பட்டிருந்ததுடன், செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சப்ரகமுவ மஹா சமன் ஆலயம் 13ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் அரசனாக விளங்கிய இரண்டாம் பராக்கிரமபாகு என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. ஆலயத்தின் தற்போதைய அமைப்பு 17ஆம் நூற்றாண்டில் அரசனாக திகழ்ந்த இரண்டாம் ராஜசிங்க மன்னால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த ஒளியூட்டல் குறித்து சுவதேஷி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. அமரி விஜேவர்த்தன கருத்து வெளியிடுகையில், 'கடந்த தசாப்த காலப்பகுதியில் நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வந்துள்ளோம். இதனால் பல பக்தர்கள் பெரும் நன்மையடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஆலயத்தின் பெரஹரா நிகழ்வுகள் மிகவும் கோலாகலமான முறையில் அமைந்திருந்தது. பார்வையிடுவதற்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களையும் பார்வையாளர்களையும் கவர்வதாக அமைந்திருந்தது' என்றார்.
சுவதேஷி நிறுவனத்தின் வருடாந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கு அமைவாக நாட்டில் இடம்பெறும் 4 காப்பு கடவுளுக்கான திருவிழாக்களின் ஒளியூட்டல் செயற்பாட்டை ஒவ்வொரு வருடமும் முன்னெடுத்து வருகிறது. களனி ரஜமஹா விஹாரை (விபீஷண தெய்வம்), றுகுணு கதிர்காம ஆலயம் (முருகன்), இரத்தினபுரி சமன் ஆலயம் (சமன் தெய்வம்) மற்றும் தெவுந்தர உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயம் (விஷ்ணு தெய்வம்) ஆகிய நான்கு தெய்வங்களுக்காக இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒளியூட்டலை சுவதேஷி மேற்கொண்டு வருகிறது.
1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் சேஃப்பிளஸ், கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பர்ல்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃவியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான 'லிட்டில் ப்ரின்சஸ்' ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளை சர்வதேச தரச் சான்றிதழான ISO 9001:2008 க்கு அமைவாக மேற்கொள்கின்றமை விசேட அம்சமாகும்.
நிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.