
செலான் வங்கியானது அண்மையில் மைக்ரோ கார்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் குத்தகைப் பங்காளராக கைகோர்த்துள்ளது. இதன்மூலம் நாடெங்கிலும் இருக்கின்ற அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும் குத்தகை (லீசிங்) வசதிகள் மற்றும் வங்கியூடான காப்புறுதி சேவைகளையும் வழங்குகின்றது. இப்போது முதற்கொண்டு, மைக்ரோ கார்ஸ் வாடிக்கையாளர்கள் அனைவரும் செலான் வங்கியினது குத்தகை வசதிகளை நாடாளாவிய ரீதியிலுள்ள வங்கியின் 150 சேவை நிலையங்களுள் ஏதாவது ஒன்றின் ஊடாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கபில ஆரியரத்ன கூறுகையில், 'வங்கியியல் துறையில் சிறப்புத்தன்மைமிக்க சேவை வழங்கலின் 25 ஆண்டு நிறைவை இவ்வருடம் நாம் கொண்டாடுகின்ற நிலையில், மைக்ரோ கார்ஸ் நிறுவனத்துடன் கைகோர்ப்பதையிட்டும் அதனது வாடிக்கையாளர்களுக்கு எமது குத்தகைசார் வசதிகள் மற்றும் காப்புறுதி சேவைகள் பலவற்றை வழங்குவதையிட்டும் நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றோம். செலான் வங்கியைச் சேர்ந்த நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவுன்னத சௌகரியம் மற்றும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற சிறந்த பெறுமதியை வழங்குவதில் எப்போதுமே முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம். அந்த வகையில் இலங்கை மக்கள் தொடர்பில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் மற்றுமொரு முன்னெடுப்பாக இது அமைகின்றது' என்றார்.
விவசாய உபகரணங்கள் முதல், மிகவுயர்ந்த அதிசொகுசு வாகனங்கள் மற்றும் SUV ரக வாகனங்கள் வரையான அனைத்து வகையான வாகனங்களையும் செலான் வங்கி குத்தகை வசதிகளின் வகையறாக்கள் உள்ளடக்கியிருக்கும். வங்கியிடமிருந்து கிடைக்கக் கூடியதாகவுள்ள குத்தகை வசதித் தெரிவுகளை, தீர்வைச் சலுகை அனுமதிப்பத்திரம் (Permit) வைத்திருப்போரும், அப் பத்திரம் இல்லாதோரும் கூட பெற்றுப் பயனடைய முடியும்.
செலான் வங்கியினது குத்தகை சேவை வழங்கலின் சிறப்பம்சம் என்னவென்றால், வாடிக்கையாளரின் பண வருவாய்க்கு ஏற்றவாறு வாகனக் குத்தகையின் மீளச் செலுத்தும் திட்டத்தை பிரத்தியேகமானதாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதாகும். வாடிக்கையாளருக்கு பாதுகாப்பையும் அதேநேரம் மன அமைதியையும் இது வழங்குகின்றது. நாம் வழங்குகின்ற மிகவும் நெகிழ்ச்சித் தன்மையுள்ள தெரிவாக இது அமைவதுடன், நாடு முழுவதிலும் உள்ள எமது பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது' என்று திரு. ஆரியரத்ன மேலும் குறிப்பிட்டார்.
மோட்டார் வாகனத் துறையைப் பொறுத்தமட்டில் வாகனங்களுக்கான குத்தகை என்பது மிகவும் முக்கியத்துவமிக்க ஒன்றாக காணப்படுகின்றது. எனவேதான் விவசாயம், சுற்றுலா, கட்டிட நிர்மாணம், போக்குவரத்து போன்ற பல பிரிவுகளுக்கு குத்தகை துறையில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ற வகையில் செலான் வங்கி தன்னை முழுமையாக தயார்படுத்தி உள்ளது.
வங்கியியல் தொடர்பான பாரம்பரிய எல்லைக்கோடுகளை கடந்து செல்லும் வகையிலமைந்த செலான் வங்கியின் 'வங்கியூடான காப்புறுதி' (Bancassurance) சேவையானது, மைக்ரோ கார்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தமது அனைத்தவிதமான காப்புறுதித் தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள மேலும் உதவியாக அமைவதன் மூலம், அவர்களுக்கு மிகவுன்னதமான சௌகரியத்தை அளிக்கின்றது. கடந்த பல வருடங்களில் 'வங்கியூடான காப்புறுதித்' துறையில் மிகச் சிறந்த செயலாற்றல்களை செலான் வங்கி வளர்த்துக் கொண்டுள்ளது. இந்த சேவைப் பிரிவை நாம்; விஸ்தரித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, தமது காப்புறுதிசார் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள எதிர்பார்த்துள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக் கூடிய தெரிவு வசதிகளை தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்' என்று திரு. ஆரியரத்ன உறுதிபட தெரிவித்தார்.
மைக்ரோ கார்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி. லோரன்ஸ் பெரேரா கூறுகையில், 'செலான் வங்கியுடன் ஒன்றிணைவதையிட்டும், அதனது குத்தகை வசதிகள் மற்றும் அதிசிறந்த சேவைகளை எமது வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது குறித்தும் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இது ஒரு இலகுவான காரியமல்ல என்பதில் சந்தேகமில்லை. நாடு முழுவதும் செலான் வங்கி கொண்டுள்ள பரந்த அளவான கிளை வலையமைப்பு அதனது மனமகிழ்ச்சி தரவல்ல குத்தகைசார் வாக்குறுதிகளையும் ஒருங்கே வழங்கும் வகையில் இவ்வசதி காணப்படுகின்றது' என்றார்.
சமகால தொடர்பிணைப்பு வசதியைக் கொண்ட வலைப்பின்னலோடு இணைக்கப்பட்டுள்ள உறுதிமிக்கதும் அதேநேரம் நாடளாவிய ரீதியில் பரந்துபட்டதாகக் காணப்படும் செலான் வங்கியின் 150 சேவை நிலையங்களும் இலங்கை முழுவதிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான திருப்தியுற்ற வாடிக்கையாளர்களுக்கு செலான் வங்கியின் மனநிறைவு தரக்கூடிய மற்றும் பரந்த வகைகளிலான வசதிகள்; மற்றும் சேவைகளையும் வழங்குவதற்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளன.