
ஹொரனை ஆதார வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்பட்ட பிரதேசத்தின் அரச தனியார் நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக தீர்மானமொன்றை எட்டுவதற்குமான கலந்துரையாடலொன்று மில்லேவவில் அமைந்துள்ள நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.
நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் கழிவு முகாவமைத்துவம் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகின்றமையால் கலந்துரையாடலை நிறுவனத்தில் நடத்துவதற்கு ஹொரனை வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்தது.
இந்த கலந்துரையாடலுக்கு அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்களின் உயரதிகாரிகள் 80 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கலந்துரையாடலுக்கு முன்னர் நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனத்தினர் சுற்றாடலை பாதுகாத்து எவ்வாறு கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்கின்றனர் என்பதை அனைவரும் கண்காணித்தனர். நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கான பிரதி பொதுமுகாமையாளர் நாலக்க குணவர்தன, ஆய்வு கூடத்துக்கான பிரதி பொதுகாமையாளர் நிஷான் விக்கிரமசிங்க ஆகியோரால் சுற்றாடலுக்கு சார்பாக கழிவு முகாமைத்துவம் மேற்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற பசுமைக்கான தேசிய விருதினை கடந்த இரண்டு ஆண்டுகளாக நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் வென்றெடுத்தது. இயற்கை வளங்களுக்கு அமைய சுற்றாடலை பாதுகாத்து உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை மதிப்பிட்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த விருதினை வருடந்தோறும் வழங்கி வருகின்றமை விசேட அம்சமாகும்.
இயற்கை வளங்களை பாதுகாத்தல், கழிவு பொருட்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்தல், மீள பாவனை செய்ய முடியாத பொருட்களை உபயோகிப்பதை குறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு, பங்களிப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டே நிறுவனத்துக்கு பசுமை விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஹொரனை பிரதேசத்தின் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஹொரனை வைத்தியசாலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதில் சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரவின் பணிப்பாளர் டொக்டர் தலதா லியனகே, இலங்கை முதலீட்டு சபையின் வலய பணிப்பாளர் அத்துல ஜெயசிங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கழிவு முகாமைத்துவ பணிப்பாளர் அஜித் வீரசுந்தர, கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நளீன் மான்னப்பெரும, சுகாதார அமைச்சின் கழிவு அகற்றல் மற்றும் மீள்சுழற்றி பிரிவைச் சேர்ந்த டொக்டர் நெவில் விஜேசேகர, ஹொரனை ஆதார வைத்தியசாலையின் டொக்டர் ரி.கே. களுபோவில உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.