2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையின் பங்குப்பரிவர்த்தனையை மாற்றியமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் தற்போதைய கட்டமைப்பை இல்லாமல் செய்து, பங்குதாரர்கள் உரிமையாண்மையை கொண்ட கம்பனியாக கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்கு முன்னதாக இலங்கை நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

தற்போது கொழும்பு பங்குப்பரிவர்த்தனையானது  நம்பிக்கை அடிப்படையில் இயங்கும் தாபனமாக அமைந்துள்ளதுடன், முழுமையாக பங்குமுகவர்களின் உரிமையாண்மையை கொண்டுள்ளது.

மறுசீராக்கம் செய்யப்படுவதன் மூலம் பங்குப்பரிவர்த்தனையை இலாப நோக்குடைய பங்குதாரர்களின் உரிமையாண்மையை கொண்ட நிறுவனமாக அமையவுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .