2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களை பட்டியலிட புதிய பலகை அறிமுகப்படுத்தப்படும்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களை பட்டியலிடவென புதிதாக பலகையொன்றை கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
 
இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியுடன் தாபிக்கப்படவுள்ள கம்பனிகளுக்கென புதிய பலகை ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும், பரிவர்த்தனைகள் சபை இந்த பரிந்துரையை நேர்த்தியாக பார்வையிட்டுள்ளதாகவும், வெகுவிரைவில் இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
 
தற்போது கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் மொத்தமாக இரு பலகைகளை கொண்டுள்ளது. பிரதான பலகையில் பெரிய நிறுவனங்களும், திரிசவி பலகையில் புதிதாக பட்டியல்படுத்தப்பட்ட நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .