2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவின் கசினோ செயற்பாட்டாளர் இலங்கையுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில்

A.P.Mathan   / 2013 நவம்பர் 04 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் கசினோ செயற்பாட்டாளரான ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் தனது ஆடம்பர கசினோ விடுதியை அமைப்பது தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கடந்த வாரம் இடம்பெற்ற நிறுவனத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
 
இலங்கை நாடாளுமன்றத்தில் குறித்த கசினோ விடுதி அமைக்கப்படுவதற்கான வரி விலக்கழிப்புகள் தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என நாம் நம்புகிறோம். அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கத்துடன் ஈடுபடவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
 
கொழும்பு பேர வாவிக்கு அருகாமையில் இந்த மாபெரும் 5 நட்சத்திர கசினோ விடுதி நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனாலும், இது தொடர்பில் இலங்கையில் பல்வேறு விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டதால், இந்த திட்டம் நிறுவுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த வரிவிலக்கழிப்பு தொடர்பான விடயங்கள் ஒத்தி வைக்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .