2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

செப்டெம்பர் மாதத்தில் வாகனப்பதிவுகளில் வீழ்ச்சி

A.P.Mathan   / 2013 நவம்பர் 05 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய வாகனப்பதிவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜேபி செக்கியுரிட்டீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் புதிய வாகனப் பதிவுகள் செப்டெம்பர் மாதம் வீழ்ச்சியடைந்திருந்த போதிலும், மோட்டார் சைக்கிள்களின் பதிவுகளில் அதிகரிப்பு பதிவாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூன் மாதம் முதல் புதிய கார்களின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் செப்டெம்பர் மாதத்தில் சரிவை பதிவு செய்திருந்தமை அவதானிக்க முடிந்தது. SUV ரக வாகனங்களின் பதிவுகளிலும் செப்டெம்பர் மாதத்தில் வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
 
முச்சக்கர வண்டிகளின் வாகனப்பதிவுகளும் செப்டெம்பர் மாதத்தில் சரிவான பெறுமதியை பதிவு செய்திருந்தன. 
 
மாருதி சுசுகி ரக கார்கள் செப்டெம்பர் மாதத்தில் அதிகளவு பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் தொகை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு தயாரிப்பான மைக்குரோ கார்களின் பதிவுகளில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டிருந்தது. சொகுசு கார்களின் பதிவுகள் அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .