2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குச்சந்தை சரிவு

A.P.Mathan   / 2013 நவம்பர் 05 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஒருவார காலப்பகுதியில் பதிவாகிய ஆகக்குறைந்த பெறுமதியை நேற்றைய தினம் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது பதிவாகியிருந்தது. இதில் ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் பிஎல்சி நிறுவனம் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. கடந்த மூன்று வார காலப்பகுதியில் பதிவாகிய ஆகக்குறைந்த பங்குப்பெறுமதியை நேற்றைய தினம் பதிவு செய்திருந்தது. 
 
பிரதான சுட்டெண் 26.95 புள்ளிகள் சரிவடைந்து 5927.41 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. ஒக்டோபர் 29ஆம் திகதியின் பின்னர் பதிவாகியிருந்த ஆகக்குறைந்த பெறுமதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 15ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி தனது நாணய மாற்றுக் கொள்கையை 50 அடிப்படை புள்ளிகளால் குறைத்திருந்ததை தொடர்ந்து, கொழும்பு பங்குச்சந்தை 0.42 வீத சரிவை பதிவு செய்துள்ளது.
 
நேற்றைய தினம் மொத்தப்புரள்வு பெறுமதி 419.3 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஆர்வத்தை செலுத்தியிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .