2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எயி்ட்கன் ஸ்பென்ஸ் புதிய ஹோட்டல் ஒன்றை நிறுவ திட்டம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 06 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எயிட்கன் ஸ்பென்ஸ் குழுமம், இலங்கையின் தென் மாகாணத்தில் 100 மில்லியன் டொலர்கள் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் 500 அறைகளை கொண்ட நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க முன்வந்துள்ளது. இதற்காக ஸ்பெயின் நாட்டின் RIU ஹோட்டல் தொடருடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தையில் மேற்கொண்டுள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.
 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விஸ்தீரண பணிகள் காலி முதல் ஹம்பாந்தோட்டை வரை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் முடியும் தருவாயில் இந்த ஹோட்டல் நிர்மாணப்பணிகளும் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என எயிட்கன் ஸ்பென்ஸ் குழுமத்தின் உதவி தலைவர் ரஞ்சன் பிரிட்டோ தெரிவித்தார்.
 
ஸ்பெயின் நாட்டின் RIU ஹோட்டல் தொடரானது சுமார் 16 நாடுகளில் 107 உடமைகளை நிர்வகித்து வருவதுடன், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மேற்கொள்ளும் முதலாவது திட்டமாக இது அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .