2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் அங்கத்துவ நிறுவனங்கள் இரண்டு உரிமை மாற்றம்

A.P.Mathan   / 2013 நவம்பர் 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இரு அங்கத்துவ நிறுவனங்களான எக்ஸ்போலங்கா கொமோடிடீஸ் (பிரைவேற்) லிமிடெட் மற்றும் லங்கா பிரீமியர் பூட்ஸ் (பிரைவேற்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் உரிமையை அபர்தீன் ஹோல்டிங்ஸ் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிறுவனங்களையும் கொள்வனவு செய்வதற்கான மொத்த கொடுப்பனவில் 75 வீதத்தை அபர்தீன் ஹோல்டிங்ஸ் மேற்கொண்டுள்ளதாகவும், எஞ்சிய தொகையை மூன்று மாத காலப்பகுதியினுள் செலுத்த தயாராகவுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் மூலம் திரட்டப்படும் தொகை, குழுமத்தின் பிரதான வர்த்தக செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என குழுமம் அறிவித்துள்ளது.
 
இந்த இரு நிறுவனங்களும் 550 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் மேற்கொண்டுள்ள தரவேற்றத்தில் கம்பனி குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .