.jpg)
பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் பெருமளவு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சாதாரண பங்குகள் மற்றும் ஜோன் கீல்ஸ் பங்காணைப்பத்திரங்களில் தங்கியிருந்ததை நேற்றைய தினம் பங்கு கொடுக்கல் வாங்கல்களின் போது அவதானிக்க முடிந்தது. மொத்தப்பங்குப்புரள்வின் 70% இவை பங்களிப்பு செய்திருந்தன. ஆனாலும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகிய பங்குகளின் விலைச்சரிவுகளின் காரணமாக இரு சுட்டிகளும் மறை பெறுமதியில் நிறைவடைந்திருந்தன. சிலோன் கார்டியன் இன்வெஸ்ட்மன்ட் ட்ரஸ்ட் மற்றும் டோக்கியோ சீமெந்து பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டது. டெஸ் அக்ரே, ட்ச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் PCH ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவு முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர்.
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை பன்முகத் துறை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்காணைப்பத்திரம் W0022 மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்காணைப்பத்திரம் W0023 பங்களிப்புடன்) இந்த துறை 2.21% சரிவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 9.10 ரூபாவால் (4.17%) சரிவடைந்து 209.30 ரூபாவாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்காணைப்பததிரம் W0022 பங்கொன்றின் விலை 10.41 ரூபாவால் (13.62%) சரிவடைந்து 66.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்காணைப்பததிரம் W0023 பங்கொன்றின் விலை 14.87 ரூபாவால் (17.28%) சரிவடைந்து 71.20 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.
சிலோன் கார்டியன் இன்வெஸ்ட்மன்ட் ட்ரஸ்ட் மற்றும் டோக்கியோ சீமெந்து ஆகிய பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் உயர்ந்த பங்களிப்பை வழங்கியிருந்தன. சிலோன் கார்டியன் இன்வெஸ்ட்மன்ட் ட்ரஸ்ட் பங்கொன்றின் விலை 3.00 ரூபாவால் (1.56%) உயர்வடைந்து 194.90 ரூபாவாக பதிவாகியிருந்தது. டோக்கியோ சீமெந்து பங்கொன்றின் விலை 0.50 (1.92%) உயர்வடைந்து 26.50 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.