2026 மே 01, வெள்ளிக்கிழமை

செங்கலடி வறுமை ஒழிப்பு மற்றும் நுண்பாக செயற்திட்ட கருத்தரங்கு

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


'நிதி ஸ்திரத்தன்மையும் முயற்சியாண்மை அபிவிருத்தியும்' என்ற தொனிப்பொருளில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின் ஏற்பாட்டில் செங்கலடி வறுமை ஒழிப்பு மற்றும் நுண்பாக செயற்திட்ட கருத்தரங்கு நடைபெற்றது.

செங்கலடி சீனித்தம்பி ஞாபகார்த்த மண்டபத்தில் மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம் தலைமையில் நேற்று நடைபெற்ற இக் கருத்தரங்கில், மத்தியவங்கியின் வறுமை ஒழிப்பு நுண்பாகக் குழுச் செயற்றிட்டத்தன்  தலைவர் ஸ்ரீ பத்மநாதன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் செங்கலடிக்கிளை முகாமையாளர் வி.குலேந்திரன், ஏறாவூர் கிளை முகாமையாளர் எஸ்.எச்.எம்.இப்ராகிம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை களைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது வறுமை ஒழிபு;பு சம்பந்தமான விடயங்கள், சங்கங்கள் அமைத்தல், சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், மத்திய வங்கியின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .