.jpg)
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சாதாரண பங்குகள் மற்றும் பங்காணைப்பத்திரங்கள் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு ஆதிக்கத்தை செலுத்தியிருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி மத்திய அளவில் காணப்பட்டது. 700 மில்லியன் ரூபா பெறுமதியை கடந்து பதிவாகியிருந்தது. பிரதான சுட்டிகள் கலப்பு பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா IOC ஆகிய பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டது. சிறியளவிலான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோர் அதிகளவு ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.
சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை பன்முகத் துறை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிரி ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்காணைப்பத்திரம் W0022 மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்காணைப்பத்திரம் W0023 பங்களிப்புடன்) இந்த துறை 0.05% உயர்வை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 0.20 ரூபாவால் (0.10%) உயர்ந்து 210.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. சிரி ஹோல்டிங்ஸ் பங்கென்றின் விலை 7.00 ரூபாவால் (4.90%) அதிகரித்து 150.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 725,919 பங்குகளால் அதிகரித்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்காணைப்பத்திரம் W0022 பங்கொன்றின் விலை 5.80 ரூபாவால் (8.91%) சரிவடைந்து 59.30 ரூபாவாக பதிவாகியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்காணைப்பத்திரம் W0023 பங்கொன்றின் விலை 6.80 ரூபாவால் (9.74%) சரிவடைந்து 63.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.
நெஸ்லே லங்கா பங்குகளும் மொத்தப்புரள்வு பெறுமதியில் உயர்ந்த பங்களிப்பை வழங்கியிருந்தன. நெஸ்லே லங்கா பங்கொன்றின் விலை 11.00 ரூபாவால் (0.57%) உயர்வடைந்து 1950.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.
நுவரெலியா ஹோட்டல்ஸ் மற்றும் மெட்ரோபொலிடன் றிசோர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகியன தமது இடைக்கால பங்கிலாபங்களை பங்கொன்றுக்கு முறையே 22.50 ரூபா மற்றும் 0.58 ரூபா என அறிவித்திருந்தன.