2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நிறைவடைந்ததை தொடர்ந்து, வரவு 2014 ஆம் ஆண்டுக்கான செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பங்குச்சந்தை நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது தொடர்ந்தும் சரிவடைந்து, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,792.72 ஆகவும், S&P  ஸ்ரீலங்கா 20 சுட்டி 3197.88 ஆகவும் அமைந்திருந்தன.

நவம்பர் 18ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,280,971,021 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 23,568 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,346 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,222 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை

பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது, கொமர்ஷல் லீசிங் அன்ட் கிரெடிட் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய பங்குகளின் மீது பதிவாகியிருந்த மொத்த விற்பனைகள், மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதி 900 மில்லியன் ரூபாவை எய்தியிருந்தது. இந்த பெறுமதியில் இவ்விரு நிறுவனங்களின் பங்குகள் 77மூ பங்களிப்பை வழங்கியிருந்தன. செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் மற்றும் டிஸ்டில்லரிஸ் போன்ற பங்குகளும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை மொத்தப் புரள்வு பெறுமதியில் வழங்கியிருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகிய பங்குகளும் கொடுக்கல் வாங்கல்கள் நிறைவின் போது நேர் பெறுமதியை பதிவு செய்ய பங்களிப்பை வழங்கியிருந்தன. நேஷன் லங்கா ஃபினான்ஸ் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு அவதானிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை

சந்தையின் மொத்தப்புரள்வில் மொத்த வியாபாரம் ஆதிக்கம் செலுத்தியிருந்ததுடன், ப்ளுசிப்கள் மீதும் அதிகளவு நாட்டம் காணப்பட்டது. ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளை கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் அதிகளவு நாட்டம் காண்பித்திருந்தனர். பங்குச்சந்தையின் மொத்த கொள்வனவில் 74.6 வீதமான பங்கு கொள்வனவை இவர்கள் மேற்கொண்டிருந்தனர். சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் குட் ஹோப் ஆகிய பங்குகளின் விலைகளில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, சந்தை சரிவை எதிர்நோக்கியிருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா ஆகியன குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. பான் ஏசியன் பவர் மற்றும் PCH

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .