2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பிராந்திய அபிவிருத்தியில் மற்றுமொரு பங்களிப்பை வழங்கும் ஃபஷன் பக்

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி நவநாகரீக ஆடை விற்பனையகமும் நாடு முழுவதும் 17 விற்பனையகங்களை கொண்டியங்கும் ஃபஷன் பக், தனது 'சிசு திரிமக' சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கு அமைவாக கணினி தொகுதி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

பிராந்திய அளவில் தகவல் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்கில், இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் தென் மாகாணத்தின் கம்புருபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பின்தங்கிய பாடசாலையான தும்பே கனிஷ்ட வித்தியாலயத்துக்கு இந்த கணனி தொகை அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. அனைத்து இனங்களையும் சேர்ந்த 200க்கும் அதிகமான மாணவர்கள் இந்த பாடசாலையில் கல்வி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஃபஷன் பக் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷபீர் சுபியன் கருத்து தெரிவிக்கையில், 'சிறுவர்கள் எமது எதிர்காலம், ,தை நாம் கவனத்தில் கொண்டு, அவர்களுக்காக நாம் மேற்கொண்டுள்ள இந்த சிறிய உபகாரம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ,ந்த கணனி தொகுதியின் மூலமாக தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்ளக்கூடியதாக ,ருக்கும்' என்றார்.

மாணவர்களின் கணனி ஆளுமையை விருத்தி செய்வது என்பது, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறையின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு கணனிகளை வழங்குவது, மாணவர்களுக்கு தமது கல்வியறிவை வளர்த்துக் கொள்ள அவசியமான மென்பொருட்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனைய பல பின்தங்கிய பாடசாலைகளைப் போலவே, தும்பே கனிஷ்ட வித்தியாலயத்துக்கும் ,ணைய வசதிகளுடன் கூடிய சிறிய கணனி பிரிவொன்றின் தேவை நிலவியது. பாடசாலை அதிபரான திருமதி. புஷ்பராணி கருத்து தெரிவிக்கையில், 'எம்மை பார்வையிட வருகை தந்த பல நிறுவனங்களுடன் நாம் தொடர்பை ஏற்படுத்திய போதிலும், எவரும் எமக்கு உதவிகளை வழங்க முன்வரவில்லை. ஆனாலும் ஃபஷன் பக் நிறுவனம், எமது கோரிக்கை செவிசாய்த்து, இரண்டு வார காலப்பகுதியினுள் எமது பாடசாலைக்கு கணினி கூடம் அன்பளிப்பு செய்தது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .