2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் சரிவு

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி செயற்பாடுகளுக்கான அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை 2013ஆம் ஆண்டில் 37வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அரச விதிமுறைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளமையின் காரணத்தால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்று சென்ற றியாத் நகரிலிருந்து 960 இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கு 29.01 மில்லியன் ரூபாவையும், ஜெதாவிலிருந்து 129 இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கு 5.9 மில்லியன் ரூபாவையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலவிட்டிருந்தது.

தற்போது றியாத்தில் பணியிலிருந்து தப்பித்து சென்ற 140 பணிப்பெண்கள் இலங்கைக்கு மீள வருவதற்கு தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .