2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பங்குச்சந்தை நடவடிக்கைகள் நேர் பெறுமதியில் நிறைவு

Kogilavani   / 2013 நவம்பர் 29 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் நான்கு நாட்களாக சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்ததை தொடர்ந்து இன்றைய கொடுக்கல் வாங்கல்களில் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. சிலோன் டொபாக்கோ கம்பனி மற்றும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஆகியன விலை உயர்வுக்கு பங்களிப்பு வழங்கியிருந்தன. மொத்தப்புரள்வு பெறுமதியும் பதிவாகியிருந்ததுடன், இதில் நு-செனலிங் மற்றும் கொமர்ஷல் லீசிங் மற்றும் ஃபினான்ஸ் ஆகியன உயர்ந்தளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. இதேவேளை, கொமர்ஷல் வங்கி மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகிய பங்குகள் மீதும், எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகள் மீதும் அதிகளவு நாட்டம் காணப்பட்டது.

டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் மற்றும் Pஊர் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவு முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல் தொழில்நுட்பத் துறை மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (நு-செனலிங்; பங்களிப்புடன்) இந்த சுட்டி 0.82மூ சரிவை பதிவு செய்திருந்தது. நு-செனலிங்;; பங்கொன்றின் விலை மாற்றமின்றி 10.50 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.

சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் இரண்டாவது அதிகளவு பங்களிப்பை பன்முகத் துறை வழங்கியிருந்தது. (எயிட்கன் ஸ்பென்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்களிப்புடன்;) இந்த துறை சுட்டி 0.63மூ சரிவை பதிவு செய்திருந்தது. எயிட்கன் ஸ்பென்ஸ் பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் (0.93மூ) சரிந்து 107.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 2.00 ரூபாவால் (0.93மூ) சரிந்து 212.00 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.

சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி துறையும் கணிசமான அளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்களிப்புடன்;) இந்த துறை சுட்டி 0.28மூ உயர்வை பதிவு செய்திருந்தது. கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்கொன்றின் விலை 0.10 ரூபாவால் (2.50மூ) குறைந்து 3.90 ரூபாவாக நிறைவடைந்திருந்தது.

சந்தை நடவடிக்கைகள் நாளின் பிற்பகுதியில் முன்னேற்றம் கண்டதை தொடர்ந்து, இந்த நிலை நாளைய தினமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .